Tuesday, August 01, 2006
தலைமயிரும் நட்பும் - சிறுகதை!
வெகு நாள் பிறகு கண்ணாடி முன் நின்றேன்,நிறைய நரைத்த முடி! எப்போ தோன்றியது தெரியலை. தீடிரென்று சிரிப்பொலி, சுற்றும் முற்றும் பார்த்தேன்
"யாரை தேடர??"-ன்னு ஒரு பேச்சு குரல் வேற!
முழிச்சேன்!
"இன்னும் தெரியலையா! நான்தான் ஓன் தலமுடி பேசறேன்"
"அப்படியா! சரி எதுக்கு சிரிச்ச??!"
"இப்படி தலையெல்லாம் நரைச்ச் பின்னும், உன்னோட அழகை ரசிச்சு பார்க்கறியே அத நினச்சேன்! சிரிச்சேன்!"
"நான் என்னோட அழக பார்த்தேன்னு உனக்கு எப்படி தெரியும்??"
"பின்ன வேற என்ன பார்த்த?"
"உன்னைதான் பார்த்தேன்! உன்னால் என் நண்பர்களை பார்த்தேன்!"
"எப்படி???"
"உன்னை போல நரைத்த முடி என் நல்ல நண்பர்கள்"
"அப்படியா!! எப்படி சொல்ற???"
" உன்னை போல வெள்ளை மனம் படைச்சவங்க நல்ல நண்பர்கள்!"
"நட்புல நல்ல நட்பு கெட்ட நட்புன்னு இருக்கா??"
"நல்ல நட்பு அல்லது உண்மையான நட்பு உண்டு!"
"புரியலியே! கொஞ்சம் விளக்கமா சொல்லு!"
" சொல்றேன்! உலகத்துல நிறைய இருக்கும் பொருள் எது??"
"தண்ணி! - இது தெரியாதா??"
"இரு அவசரபடாத! புனிதமான தண்ணி எது??"
"ம்ம்ம் கங்கை!"
"ஏன்??"
"ஏன்னா! அது தூய்மையானது அதனால!"
"அதுமாதிரி! தூய்மையான மனம் படைத்தவர்களோட நட்பு இருந்தா அது உண்மையான நட்பு!!"
"இன்னும் விளக்கமா சொல்லனும்னா என்னொட இந்த கேள்விக்கு பதில் சொல்லு!"
"என்ன கேளு?"
"குழந்தைகள புடிக்குமா ஒனக்கு??"
"இது என்ன கேள்வி - எல்லருக்கும் பிடிக்குமே!"
"ஏன்?"
"ஏன்னா! அதோட மழலை சிரிப்பு! அதனால"
"ஏன் நான் கூடத்தான் சிரிப்பேன் ஹாஹாஹா! ஹாஹாஹா!"
"ய்ப்பா! சகிக்கலை"
"அப்போ குழந்தைகள் பிடிப்பதற்க்கு காரணம் அதில்ல! இல்லியா??"
"பின்ன வேறென்ன??"
"அதோட கள்ளம் கபடமில்லாத மனம்! போலித்தனமில்லாத வாழ்க்கை. அதுமாதிரி எந்த மனுஷன் தன்னோட அடி மனசுலேருந்து பேசறானோ, அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்ய கூடாதுன்னு நினைக்கிறானோ! - அவனுடைய நட்பே - உண்மையான நட்பு!!"
"சரி அப்ப என்கூட இருக்கானுங்களே மத்த கருப்பு முடி அவங்கள்ளாம் கெட்ட நட்பா??" -ன்னு எகத்தாளமா, நரைச்ச முடி கேட்டுச்சு
"எப்பவுமே எந்த விஷயத்துலயும் எதிர்மறைன்னு ஒன்னு உண்டு. ரொம்ப வெய்யிலா இருக்கும்போதுதான் குளுமையின் குணம் பிடிக்கும். அதுமாதிரி ரொம்ப குளிரும்போதுதான் சூட்டின் சுகம் தெரியும்! எந்த விஷயமுமே நாம பார்க்கும் பார்வையில்தான் இருக்கு. அதனால நல்லது கெட்டதுன்னு பார்க்காம வாழ்க்கைக்கு எது தேவை எது தேவையில்லை என்கிற "பண்பட்ட பார்வை" வேண்டும்! அந்த பண்பட்ட பார்வையினாலதான் குடிசையில் வாழும் ஏழைகூட மகிழ்ச்சியா வாழ்கிறான்!
கிறுக்கியது - பிரசன்னா!
 
posted by Prasanna Parameswaran at 8:23 AM |


2 Comments:


At 11:11 AM, Blogger Jeevan

Nalla thaanpa ealuthirukka. Water and Child example was very true. Natpukku ellai illai:)

 

At 9:57 AM, Blogger Prasanna Parameswaran

Thanks Jeevan! This is my first attempt to short story writing! I will continue to write more! :)