Monday, August 07, 2006
சிறைச்சாலையில் பூவனம்!
Before you continue reading - this is my complete imagination any criticism or feedback is welcome!
அவன்!
நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்துருக்கறது கொஞ்ச்ம் கஷ்டமாத்தான் இருக்கு! இன்னியோட இந்த ஜெயிலுக்கு வந்து ஒரு மாசமாச்சு. ஸ்கூல்ல படிக்கும்போது Drawing க்ளாஸ்ல மாஸ்டர் வீடு வரைய சொல்லுவாரு! நான் வெறும் கட்டம் கட்டமா வரஞ்சுருப்பேன்! அவரும் திட்டிக்கிட்டே சொல்வாரு
"இப்படியே தப்பு தப்பா வேலைய செஞ்சேனா, இந்த மாதிரி கட்டம் கட்டமா கம்பி எண்ண வேண்டியதுதான்!" இன்னிக்கி அதுதான் உண்மை! எதுக்கு கம்பி எண்ணபோரன்னு சொல்றாங்கன்னு அன்னிக்கி புரியல! இன்னிக்கி உள்ள இருக்கும்போதுதான் யோசிக்க தோணுது! -
1. இப்படி நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்திருந்தா பைத்தியமே பிடிச்சுடும், அதுக்காக வேண்டி இப்படி செய்யறாங்களோ என்னவோ!
2. இல்ல சில பேருக்கு இங்க வந்துட்டு போறது வாடிக்கையான விஷயம் போல - உள்ள வரும்போது இன்னும் இங்க எத்தனை நாள் இருப்போம், எத்தனை நாள் கழிச்சு வருவோம்னு கம்பில கணக்கு பண்ணுவாங்களான்னு தெரியலை!

எது எப்படியிருந்தாலும் சரி, எனக்கு ஒரு சந்தோஷம் " அவன் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்னு யாரும் சொல்ல மாட்டாங்க!" ஏன்னா இதுதான் முதல் தடவையா வந்துருக்கேன் - திரும்பி போக முடியாது, நாள் குறிச்சுட்டாங்க!

ஆமா ஒரு கொலைய பண்ணிட்டுதான் உள்ள வந்தேன்! வயல்ல நாத்து நட்டதும் கூடவே விளையுற கள்ளி செடிய பிடுங்கறமாதிரி, அந்த கிராதகன அழிச்சேன்! எல்லாருக்கும் வாழ்க்கைல ஒருதடவைதான் பேர் வெப்பாங்க, எனக்கு விதிவிலக்கு! அப்பா அம்மா வெச்ச பேர் ஒருதரம், இப்ப "தீவிரவாதி!!"
ஏன்னா நான் கொன்னது நம்ம மாநிலத்தோட ஒரு பெரிய அரசியல் தலைவர்!
கதற கதற பதினாலு வயது அம்முகுட்டிய, என் கண்ணெதிரே துள்ளியோடிய கன்னுக்குட்டிய கற்பழிச்சு கொன்னானே - அவனா தலைவர்! பிரதம மந்திரியேவா இருந்தாலும் எனக்கு கவலையில்லை! இந்த மாதிரி ஆளுங்கள சுட்டு பொசுக்கனும் அததான் நான் செஞ்சேன் இது தப்பா!?

"பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?" -ன்னு சொல்லிட்டு போய்விட்டாயே மகாகவி. உன்னை போல இன்னிக்கி ஆயிரம் பேர் வேண்டும் இவர்களை திருத்த! யாருக்கு தெரியும் நீ இன்று வாழ்ந்திருந்தால் புத்தியை தீட்டுவதற்கு பதிலாக கத்தியை தீட்டியிருப்பாய்!

என்னை தீவிரவாதின்னு சொல்றதுகூட ஒரு விதத்துல சரிதான்!
"தீவிரம்+ஆதி!" ஆதி மனிதனின் தேடலில் தீவிரம் இருந்ததுனாலதான் கற்களிலிருந்து நெருப்பையும், அந்த நெருப்பை பின்னுந்தி பால்வெளியில் உலவும் ராக்கெட்டுகளையும் கண்டு பிடிக்க முடிந்தது!

இந்த ஜெயிலுக்கு தலைமை அதிகாரி "மிஸ். ரோஷினி.,ஐ.பி.ஸ்", ரொம்ப திறமைசாலி, ஒரு மாசம் தெலுங்கானாவுல நக்சலைட்டுகள அடக்குவதற்கு சிறப்பு படைக்கு பொருப்பாளரா அனுப்பி வெச்சாங்க! இந்த வாரம்தான் திரும்பி வந்துருக்காங்க! அட இதோ தாண்டி போறங்களே!

"ஹலோ! மிஸ். ரோஷினி! உங்களை பத்தி நிறைய கேள்விபட்டிருக்கேன்!
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை அழிப்போம்!-னு மகாகவி சொன்னதுக்கு எடுத்துக்காட்டா நீங்க இருக்கருதுல ரொம்ப மகிழ்ச்சி!
மேலும் இந்த துறைல சாதனைகள் புரிந்து, நம்ம மாநிலத்துல அமைதிய நிலைநாட்டனும் அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்!"

அவள்!
இந்த தீவிரவாதிகளோட தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது! தெரு நாய்களை அமுக்கரமாதிரி பிடிச்சாலும் நாளுக்கு நாள் முளச்சுக்கிட்டே இருக்காங்க!
"எண்ணித் துணிகக் கருமம்"-னு ஐயன்பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டாரு. இந்த கருமம் புடிச்ச தெரு நாய்களை பிடிக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டபடத்தான் வேண்டியிருக்கு!
ஆனா இப்படி ஒரு அதிர்ச்சி கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்ல! இந்த 43-ம் செல்லுல புதுசா வந்துருக்கற "அதிரூபன்" - உண்மையிலேயே ஒரு அதிசயம்தான்! அன்னிக்கி அவ்வளவு மென்மையா அறிமுகபடுத்திக் கொண்ட விதம் எனக்கு உண்மையிலேயே ஒரு அதிர்ச்சிதான்! எல்லா தீவிரவாதிகளையும் எருமமாடு பொறம்போக்குன்னே கூப்பிட தோன்றிய எனக்கு அவரை அப்படி கூப்பிட தோணலை!

எத்தனை தெளிவு-நடை,பேச்சுல! இந்த இரண்டு வார நட்புல எத்தனை விஷயங்களை பேசினோம்!
அந்த அரசியல் தலைவர மன்னிச்சுருக்க கூடாதா, எதற்கு கொலைன்னு கேட்டதற்கு "ரோஷினி(என் பெயரை கூப்பிடும் அளவிற்கு நட்பு வளர்ந்துவிட்டது) ஒரு குழந்தை ஒரு பொருளை உடைச்சா என்ன செய்வீங்க இனிமேல் அப்படி செய்யாதேன்னு கண்டிப்பீங்க, ஆனா அதே பொய் சொன்னா நீங்க என்ன செய்வீங்க, அடிச்சு திருத்துவீங்க! ஏன்னா மொதல்ல செஞ்சது தப்பு ரெண்டாவது தவறு! தெரியாமல் செஞ்ச தப்பை மன்னிக்கலாம், தெரிந்தே செய்யும் தவறை மன்னிக்க முடியாது! அந்த அரசியல் தலைவர் செஞ்சது மன்னிக்க முடியாத தவறு! "-னு ரொம்ப தெளிவா பேசினாரு!

ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தும் அது, தள்ளுபடி பண்ணிட்டாங்க!
இந்த மூன்று வார பழக்கத்துல ஒரு ஆண் மீது இத்தனை ஈர்ப்பா?? கயவர்களை துரத்தி துரத்தி தோய்ந்து போன என் கால்களும் மனமும், இப்படி ஒருத்தரை பார்த்ததும் விரும்பியது ஏன்? கழிவிரக்கமா?? இல்லை! நிச்சயமா இல்லை! பெண்மையை மதிக்கத் தெரிந்த, சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள இவரை போன்றவர் அல்லவா நமக்கு தேவை?

இவரோட மரணத்தை தடுக்க முடியல, இப்படிபட்டவர்களை உருவாக்கனுமே - என்ன செய்ய போறேன்? ஆமா இதுதான் சரியான முடிவு!

இருவரும்!
"முடியாது ரோஷினி இதுக்கு ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்! என்னால உங்க வாழ்க்கைய பாழாக்ககூடாது! உங்களோட முடிவு விபரீதமானது!"

"ஏன் அதிரூபன்? உங்கள மாதிரியே தெளிவான சிந்தனையோட ஒரு ஜீவன் இந்த சமுதாயத்தை நாளைக்கு ஆண்டால் எவ்வளவு நல்லா இருக்கும்? நாளைக்கு தூக்குல உங்க வாழ்க்கை முடிஞ்சுடலாம், ஆனா உங்க சிந்தனை அழிஞ்சுடுமா? இன்னிக்கி ஒரு நாள் உங்க மனைவியா வாழ ஆசைப்படறேன்!
உங்களால சாதிக்க முடியாதத உங்க உயிர் மூலமா - நம்ம மகனோ, மகளோ செய்யனும்னு ஆசைப்படறேன்!உங்க எண்ணத்தோடயும், நம்பிக்கையோடயும் ஒரு விதை ஆலமரமாய் கிளர்ந்தெழனும்னு ஆசைப்படறேன்!

'மனதி லுறுதி கொண்டும்,
வாக்கினி லேயினிமை கொண்டும்,
நினைவு நல்லது கொண்டும்,
நெருங்கின யெனதுஅதிரூபன் கைப்பட வேண்டும்'-னு
மகாகவி வரிகள்'-ல

நான் வேண்டியது நடக்ககாது
நம்ம வம்சமாவது அப்படி வளரட்டுமே! நீங்க இதுக்கு கண்டிப்பா ஒத்துக்கனும்! "

இத்தகைய தெளிவுடைய பெண்ணை, எந்த ஆடவன் மறுப்பான்! அங்கே தேவர்கள் பூமாரி பொழியவைல்லை, அந்தணர்கள் வேதம் முழ்ங்கவில்லை,
நல்லறம் தொடங்க மஞ்சம் இல்லை,
நாளைய சமுதாயத்தில் ஒரு உயர்ந்த மனிதனை உருவாக்க -
"சிறைச்சாலையில் பூவனம்" நட்டார்கள்!!!
 
posted by Prasanna Parameswaran at 2:20 AM |


8 Comments:


At 9:11 AM, Blogger ambi

கதை ரொம்ப நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாமோ? esp the "aval" part..

 

At 9:34 AM, Blogger Prasanna Parameswaran

Thanks ambi! yes I could have written more but I wanted to cut short bcoz I cant write more in a blog.
இத எழுதறதுக்கே எனக்கு 3hrs ஆச்சு! :)

 

At 10:59 AM, Blogger Keshi

hehe I cant read Tamil all that well...anyways hope ur keeping well.

Keshi.

 

At 11:14 AM, Blogger Preethe

Hi Prasanna
Very good piece of work .
Could feel the depth of the characters ..

 

At 6:16 PM, Blogger Prasanna Parameswaran

Keshi:
Sorry to hear that, Yeah I know most people cant read Tamil, but what to do the love I have for this language is so great, that I cant stop writing anything in my own first language:) Maybe I should have another blog to do this!

Preethe: Thanks! Im thinking of writing some light moments otherwise I myself will get bored of reading my blog :)

 

At 4:37 PM, Blogger Jeevan

Wonderful writing Prasanna! If every one think like him, there will be no terror or violence in this world, it will be peace everywhere. keep on coming :)

 

At 5:51 PM, Blogger Prasanna Parameswaran

Thanks Jeevan! The only thing that is tough is to think :), which is why I think I take a long time to write!

 

At 8:05 PM, Blogger Prasanna Parameswaran

நன்றி வேதா! ஆமா என்னை போன்ற கணிப்பொறியாளர்களுக்கு எப்பவுமே அவசரம்தான்! :) நேரமின்மையை குறை சொல்ல விருப்பமில்லை! :)