Sunday, August 13, 2006
1000 ப்ரோக்ராம்களும் ஒரு மழுங்கிய(ஒரு முதிர்ந்த) மூளையும்!
இங்க நான் எழுதியிருக்கிற விஷயம் - நிறைய பேர் நிறைய விதத்துல எழுதியிருப்பாங்க! The same thing from 2 different perspectives:
1) First Is the person who is an workaholic, is hooked to the computer for the most part of his day,(like me:)), is jovial, but his dreams and knowledge have become totally void due to his nature of work!
2) Is the same person, but is more matured, dreams a lot, and has visions on how he wants to lead a happy life!


மழுங்கிய நான் - துணைத் தேடல்!
விசித்திரமாதான் இருக்கு! தெரியாத முகம், தெரியாத இடம், சுத்தி நாலு பேரு, பஜ்ஜி,காபி,என்னோட அப்பா-அம்மா, அப்புறம் இந்த பொண்ணு அவங்க அப்பா அம்மா! Project meeting'la kooda இத்தனை பேரு இல்ல! இவ்வளவு கூட்டத்த பார்த்தாலே ஒரே டென்ஷனா இருக்கு! டென்ஷனா இருந்தா கூட பரவாயில்லை - கண்றாவி தூக்கம்ல வருது! நாளைலேருந்து மத்தியானம் meeting attend பண்ண கூடாது! இந்த பொண்ணோட அப்பா மாயி படத்துல வர "அப்படியா! மாயி அண்ணன் வந்துருக்காஹ!...வாம்மா மின்னல்!"னு சொல்லுவாரே அவர மாதிரியே இருக்கார்!
அதுவும் அவரோட மீசை இருக்கே - அடடா! ஒரு மாபெரும் புதர்! TR Style'a ஒரு கவிதை தோணுது!

"வாயில் போட நினைத்ததோ தோசை,
அதை வழியில் தடுத்ததோ இந்த மீசை,
எனக்கு மட்டும் இருக்காதா இதன்மேல் ஆசை,
இந்த மனக்குமுறலோடு நான் எழுப்புகிறேன் பெரும் ஓசை!"
நாளைக்கு இவரோட போட்டோவ இந்த punch dialogues'oda எடுத்து அனுப்ப வேண்டியதுதான் நம்ம பசங்களுக்கு!

பொண்னு பேரு ராகவி - அதுக்கு என்ன அர்த்தம்னு Google'a தேடினேன் கிடைக்கல! Yahoo'la தேடினேன் கிடைக்கல! கடைசில இந்த பக்கி ரகு அனுப்பின "baby names.xls"'-ல பார்த்தேன் இருந்துச்சு! நல்ல இசையை போன்ற ரசனையுடையவள்-னு அர்த்தமா! அந்த ரகு பரதேசி அதோட நிறுத்தினானா - " உன் மனம் கவரும் பேபியின் பெயர் பார்ப்பதோடு நில்லாமல், அவள் சாமுத்ரிகா லட்சணம் பொருந்தியவளான்னும் பாரு"'ன்னு dialogue வேற! என்ன எழவோ! வாயில நுழையாத லட்சணமெல்லாம் தேவைதானா? எனக்கு தெரிஞ்ச ஒரெ "ka" லட்சணம் "ஜோதிகா" லட்சணம்தான்!
இப்படில்லாம் நான் யோசிச்சிண்டுருக்கும்போது என்னோட நைனா "டேய் அம்சா! ரொம்ப வழியாத! பொண்ணுகிட்ட தனியா பேசனும்னா! பேசிக்கோ"னு சொன்னாரு!
"நைனா சொதப்பிட்டியே! அம்சா-னு கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்! எதோ ஒரு படத்துல மடிப்பு அம்சான்னு ஒரு பொண்ணு வரும், அத மாதிரி ஆக்கிட்டியே என்ன, ஒன்னு அம்சவரதா-ன்னு முழு பேர கூப்பினும் இல்லனா வரதான்னாவது கூப்பிடனும்!"-னு நானும் நினைச்சுண்டே ராகவியோட அவங்க வீட்டு மாடிக்குபோனோம்! என்ன பேசறதுன்னு தெரியல!
"இது நீங்க நட்ட ரோசா? ரொம்ப நல்லா இருக்கு!"
"இல்ல அம்மா நட்டது!நான் தலையில வெச்சுக்கறதோட சரி"
"How Sweet Ya! ஒரு பூவை இன்னொரு பூவே தலையில் சுமந்ததோ! ஹா ஹா!" -னு பேச்ச ஆரம்பிச்சோம்!
டேய் போதும்டா உடான்ஸ்-னு மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லிச்சி! என்ன பண்றது இந்த அஞ்சு வருஷமா கம்ப்யூட்டர் முன்னாடி 12-13 மணி நேரம் வேலை பார்த்து பாண்டியராஜன் மாதிரி திருட்டு முழி வந்ததுதான் மிச்சம்! எங்க பேச்சும் தொடர்ந்தது!
" You know Raagavi" - என்ன பத்தி எல்லாம் சொல்லிட்டேன். என்னோட வேலை, அடிக்கடி foreign போக வேண்டியிருக்கும்! உங்ககிட்ட Passport இருக்குல்ல???"
"ஆஆன்! இருக்கு!"
"எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ராகவி. உங்களை பத்தி நீங்க எல்லாம் சொல்லிட்டீங்க. உங்களுக்கு என்ன??"
"ம்ம் எனக்கும்! வேற ஒன்னுமில்லை!"
இப்படியாக நானும் வேற என்ன பேசறதுன்னு தெரியாம மாடிக்கு போன வேகத்துலேயெ அஞ்சு நிமிஷத்துல திரும்பிட்டோம்!
மேற்கொண்டு விஷயங்களை பெருசுகள் பேசி ஒரு "consensus" வர, கிளம்பறதுக்கு முன்னாடி என் வருங்கால மாமனார்கிட்ட அவரோட Photo'va வாங்கின்டு (அவரு நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச புள்ளன்னு நினைச்சுகிட்டு 32 பல்லும் அவரோட மீசை புதரவிட்டு வெளியே காட்ட நான் அலறியடிச்சுண்டு) என்னோட அன்பான கம்ப்யூட்டர நோக்கி ஓடினேன்!


முதிர்ச்சியுடைய நான் - துணைத் தேடல்!
விசித்திரமாதான் இருக்கு! தெரியாத முகம், தெரியாத இடம், சுத்தி நாலு பேரு, பஜ்ஜி,காபி,என்னோட அப்பா-அம்மா, அப்புறம் இந்த பொண்ணு அவங்க அப்பா அம்மா! ஆனா தெளிவா என் அப்பா, அம்மா ரெண்டு பேருகிட்டயும் சொல்லிட்டேன், பொண்ணுகிட்ட தனியா பேசனும்னு!

ராகவியோட அவங்க வீட்டு மாடிக்குபோனோம்! எங்க பேச்ச ஆரம்பிக்கறதுன்னு தெரியல!
"உங்கள ஒரு கேள்வி கேக்கனுமே ராகவி! நீங்க ரோட்டுல போகும்போது, எதிர்ல வரவங்க தடுக்கி விழுந்துருக்காங்களா?
"ஏன் கேட்கறீங்க!"
"இல்ல உங்க கன்ன குழியில யாராவது தடுக்கி விழுந்துருப்பாங்களோ-ன்னு கேட்டேன்!"
"ஆஹா! Sir
பெரிய கவிஞரோ?"
"அப்படியெல்லாம் கிடையாது! ஆனா நம்ம சுத்தி நடக்கற சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிப்பேன்! இப்ப இந்த பஜ்ஜி காபியே பொண்ணு பார்க்க வரும்போது ஏன் குடுக்கறாங்கன்னு யோசிச்சேன்! பஜ்ஜிபோல காரசாரமா வாழ்க்கைல எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், காரத்தை இதமாய் தணிக்கற காபிபோல என் பொண்ணு உங்க கூட காலம் பூரா இருப்பான்னு பெத்தவங்க symbolic'a சொல்றாங்களோ என்னவோ??
" அடடடா!"
"பாருங்க நக்கல் பண்றீங்களே! ஏன் நீங்க கூட கவிதை எழுதீவங்கன்னு சொன்னீங்களே! எங்க ஒரு கவிதை சொல்லுங்க!"
" ம்ம்ம் சின்ன கவிதையா இல்ல பெரிய கவிதையா?"
"எதுவானாலும் சரி"
"சரி! இதோட தலைப்பு

"இறைவனும் வேறுபாடும்"
"நான் இறைவனிடம் கேட்டேன் - " எங்களில் ஏன் இத்தனை வேறுபாடு செய்தாய்?"
அதற்கு அவன் சிரித்தவாறே
"நீ மேம்படவேண்டுமென்று கண்ணீர் விட்டேன் - மழையாய்,
என் கண்ணீரை அணைகட்டி உன் சக தோழனுக்கு கொடுக்க மறுத்தாய்!
உன் வாழ்வில் வசந்தம் வீச வேண்டுமென்று - என் மூச்சை காற்றாய் தருவித்தேன்,
என் வாழ்வில் வசந்தமேயில்லை யென்று வெப்ப பெருமூச்சுவிட்டாய்!
வடதுருவம் தெந்துருவம் படைத்தேன் - துருவங்கள் கடந்து ஒற்றுமையாய் நீ வாழ,
உன் பக்கத்து வீட்டுக்காரனிடம் சண்டையிட்டு எல்லைச் சுவரெழுப்பினாய்!
ஆண்,பெண் இரு ஜாதி படைத்தேன் - வீரத்தையும் அன்பையும் உணர,
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று பாகுபடுத்தி - உயிரை கொன்றாய்!
வேற்றுமையில் ஒற்றுமை நீ காண வேண்டுமென்று இத்தனை செய்த - என்னையே
சிவன், அல்லா, கிறிஸ்து - என்று வேறுபடுத்திவிட்டாயே!" என்று திருப்பிக்கேட்டார்!

"ரொம்ப நல்லா இருக்குங்க! சமுதாயத்தின் முன்னேற்றத்தில கூட அக்கறை போல உங்களுக்கு?"
" ம்ம்ம் எனக்கு ஒரு கனவு இருக்கு கனவுன்னு சொல்றத விட vision-னு சொல்லலாம்!"
"என்ன கனவு?"
"நம்ம இந்தியவா இன்னும் 20-30 வருஷத்துக்குள்ள வளமையான் நாட மாத்தனும்னா என்ன செய்யனும்?"
" ம்ம்ம்ம் பஞ்சம் போக்கனும், நல்ல ஆட்சி மலரனும்"
"கிடையாது! ஒவ்வொருத்தரும் சிந்திக்கனும், அதுக்கு அறியாமை நீங்கனும், பாமரனும் யோசிக்கனும், நான் எப்படி மேன்மையடைவதுன்னு தனியா உக்கார்ந்து யோசிக்கனும் - அப்படி யோசிச்சா தனி மனிதன் மாறுவான், தனி மனிதன் மாறினா இந்த சமுதாயமே மாறும், இதெல்லாம் நடக்கனும்னா, எல்லாருக்கும் கல்வி நிச்சயமா வேணும்! அதனால"
"அதனால...?"
"அதனால படிக்கறதுக்கு கஷ்டப்படற 10 மாணவர்களுக்கு படிப்பு செலவு ஏத்துக்கனும் - ஒரே நிபந்தனையோட!"
"அது என்ன?"
" அவங்க படிச்சு நல்ல நிலைமக்கு முன்னேறினதும் அந்த ஒவ்வொருத்தரும் இன்னும் 10 பேரோட படிக்கற செலவ ஏத்துக்கனும்! இப்படியே ஒவ்வொருத்தரும் செஞ்சா, 10 - 100'ஆகும், 100 - 1000'ஆகும், இன்னும் 30-50 வருஷத்துல படிக்காதவங்களே இருக்க மாட்டாங்க - ஒரு வளமையான இந்தியாவா ஒருவாக்கிடலாம். ஆனா இதெல்லாம் நடக்குமா-ன்னு எனக்கு தெரியலை!"
" சபாஷ் ராகவி! ரொம்ப நல்ல சிந்தனை! நீங்க தப்பா நினைக்கலனா ஒன்னு கேக்கவா?"
"ம்ம் கேளுங்க"
"நீங்க கன்னியா? Are you a Virgin?"
"ஏன்! நான் ஆமான்னா என்ன செய்வீங்க இல்லன்னா என்ன செய்வீங்க?"
"பாருங்க கோவப்படறீங்க! ஆமாவா இல்லையான்னு மட்டும் சொல்லுங்களேன்"
"ஆமா!"
"ஏன்?!"
"இதென்ன கேள்வி ஏன்?"
"நான் சொல்லட்டுமா! ஏன்னா உங்களை மனதார நேசிக்கும் ஆடவனிடம் உங்க மனமும் உடலும் கரையனும்னு நினைக்கறீங்க! ஐயன் சொல்லிருக்காரே
"புறந் தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்"
அப்படி உள்ளத்திலே உண்மையுள்ள ஆண்மகன் இருப்பான்னு நம்பறீங்க இல்லியா?"
"ஆமா"
"அந்த நம்பிக்கைய உங்க சிந்தனைலயும் செயல்லயும் வைங்க! நிச்சயமா உங்க vision நிறைவேறும்! உங்க சிந்தனைகள நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குங்க! இப்படி ஒரு தெளிவான சிந்தனையுடைய பெண் என் வாழ்க்கை துணையா இருக்கனும் விரும்பறேன்! உங்களோட எண்ணங்களுக்கு உறுதுணையா நான் இருப்பேன். உங்களால நானும், என்னால நீங்களும் வாழ்க்கையின் எல்லையற்ற வசந்தம் காணலாம்னு நம்பறேன்! தன் கணவனை உண்மையாய் நேசிக்கும் பெண், தன் கணவன் தனக்கு புடவையோ, நகையோ, பட்டோ வாங்கித் தரனும்னு நினைக்கமாட்டா- அன்பு ஒன்றேபோதும்னு நினைப்பா, அதேமாதிரி ஒரு கணவனும் தன்னோட மனைவி தனக்கு சமைக்கனும்னோ, தனக்கு அடங்கியிருக்கனும்னோ நினைக்கமாட்டான்! அன்பே போதும்னு நினைப்பான்! ஏன்னா! எதிர்பார்த்தல் வாழ்க்கையில்லையே! புரிதல்தானே வாழ்க்கையே! எப்பவோ படிச்சதுதான் ஞாபகத்துக்கு வருது
"Love is like playing piano, first learn the rules to play - then forget all the rules and play from your heart"
உங்களை என்க்கு ரொம்ப பிடிச்சுருக்கு ராகவி! இவ்வளவு நேரம் போனதே தெரியலை! நீங்க என் வாழ்க்கை துணையா வருவீங்களா!"
"நிச்சயமா! உங்களையும் எனக்கு பிடிச்சிருக்கு அம்சவரதன்!

இப்படியாக நானும் ராகவியும் பேசிட்டு திரும்பி கீழிறங்க, நல்ல துணைவி அமைய போகும் மகிழ்ச்சியில் அவங்க அப்பாகிட்ட Family Photo'va வாங்கின்டு (அவரு நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச புள்ளன்னு நினைச்சுகிட்டு 32 பல்லும் அவரோட மீசை புதரவிட்டு வெளியே காட்ட நான் அலறியடிச்சுண்டு) என்னோட அன்பான கம்ப்யூட்டர நோக்கி ஓடினேன்!
 
posted by Prasanna Parameswaran at 4:33 AM |


11 Comments:


At 11:51 PM, Blogger Syam

aagaa oru 12-B paartha effectu..
:-)

aana andha vision really a great thought :-)

 

At 12:11 AM, Blogger Priya

Engey yo mati polirukey.

You took it really well and ther was a flow to go ahead.
Good one and I had a good laugh too.

 

At 3:52 AM, Blogger Prasanna Parameswaran

Syam: நன்றி! Besides i also wanted a write a poem within a story for quite some long time - thats the effect of raagavi telling the poem! Anyway u guys got confused rite Appa! Mission accomplished!:)

Priya:நன்றி to you too!நான் எங்கயும் மாட்டிக்கல அதான் problem'e :)

 

At 8:21 AM, Blogger BV

The concept of Comparison between an ordinary man and a man with a vision is well established in this writing ( though this is a very common thought,the way it is handled here makes a difference)


"தனி மனிதன் மாறினா இந்த சமுதாயமே மாறும்,"
- This is the vision,a very powerful and practical one. Visions should be practical( and not like singara chennai 2000) and this is a 100% realistic

"என்னையே
சிவன், அல்லா, கிறிஸ்து - என்று வேறுபடுத்திவிட்டாயே.. "
இது மிகவும் அருமை.

As a positive critic, i have some points to mention:
Bringing in "are you a virgin" and the comparsions done below seems to be irrelevant.

Especially, அப்படி உள்ளத்திலே உண்மையுள்ள ஆண்மகன் இருப்பான்னு நம்பறீங்க இல்லியா?"
"ஆமா"
"அந்த நம்பிக்கைய உங்க சிந்தனைலயும் செயல்லயும் வைங்க! நிச்சயமா உங்க vision நிறைவேறும்! "

Vision நிறைவேறுவதர்க்கும், கற்பு பற்றிய உரையாடலுக்கும், "உண்மையுள்ள ஆண்மகன்" க்கும்( உள்ள relation இங்கு சற்று பொருத்தமில்லாததாக எனக்கு புலப்படுகிறது...

கற்பை பற்றி காவியம் வரையலாம் கண்ணே...

மேலும் எழுத என் வாழ்த்துக்கள்!

- பாலு 8/14/06

 

At 8:27 AM, Blogger Prasanna Parameswaran

நன்றி பாலு! Yes I know I should have written this in another way. But I had initially written that way, and dint want to change it- despite knowing the fact that it was a silly comparison and very much irrelevant to the context here :)

 

At 10:14 AM, Blogger Keshi

:( I didnt get it.

Keshi.

 

At 2:50 PM, Blogger Balaji S Rajan

Good imagination. You are getting the humour. The first incident was very humourous than the second one. Though the difference is clearly visible in both the ways, the conversation was too long. But I enjoyed it. Good one and innovative. Please continue your humorous writing. It is not that easy to write. Keep it up!

 

At 8:48 PM, Blogger Prasanna Parameswaran

Keshi: I thot u dint know to read Tamil. Do you read Tamil? Anyway if you do and u dint understand the post - then here is the explanation. The concept is a simple betrothal scene per the typical Indian fashion. The first part is how it would have happened if it had been a guy who was a workaholic and jovial but doesnt have much dreams The second part is the same guy - but thinking that he is more matured and has great visions for his life! Anyway dont worry! :)
Bala: Thanks and do visit again!

 

At 1:01 PM, Blogger Jeevan

Arumaiyana karpanai Prasanna!!Iraivannum Vearupadum was very nice, ஒவ்வொருத்தரும் சிந்திக்கனும், அதுக்கு அறியாமை நீங்கனும், பாமரனும் யோசிக்கனும்....... enna oru sinthanai.

innum eathirpapugaludan Jeevan:)

 

At 2:09 PM, Blogger Preethe

Hi Prasanna
Romba nalla irukku
own experience?

Well .. I really dindt get the logic behind asking "Are you virgin?"

 

At 4:31 PM, Blogger Prasanna Parameswaran

Jeevan : thanks!
Preethe: mm no that was a total imagination! Yeah! it maybe sound illogical, but anyway thats how I intially wrote it and dint want to change it! Thanks for ur comments anyway!