Tuesday, July 08, 2008
81. ஹைக்கூ - ஓர் அலசல்!
எட்டுத்திக்கு திரும்பினாலும் பாமரன் கூட இன்று ஹைக்கூ எழுதுகிறான்!. ஜப்பானில் தோன்றிய இந்த மரபு கவிதைகள் இன்று உலக கவிதை இலக்கியத்தின் நடைமுறையாகிவிட்டது! அதிகபட்சமாய், 3 வரிகளில், 17 ஸிலபலில்(Syllable) முதல் வரியில் ஐந்தும், இரண்டாவதில் ஏழும், மூன்றாவதில் ஐந்துமாய் ஜப்பானியர்கள் எழுதும் கவிதைதான் ஹைக்கூ!
"ஹொக்கு" என்று முதலில் அழைக்கபட்ட இவை, 19-ம் நூற்றாண்டில் "மசாஓகா ஷிகி" என்னும் கவிஞரால் ஹைக்கூ என்று அழைக்கப்பட அந்த பெயர் இன்று வரை நிலவிவருகிறது. உலகம் முழுவதும் 20-ம் நூற்றாண்டிலிருந்து வேகமாய் பரவ தொடங்கிய இந்த கவிதைகளை, விதிவிலக்கின்றி, மேலை நாட்டு மோகத்தினால், இந்தியாவிலும் பரவ தொடங்கியது!. இந்தியாவில், பெரும்பாலும், வங்காளம், தமிழ், உருது, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஹைக்கூ எழுதப்பட்டது! 20-ம் நூற்றாண்டில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் நிறைய ஹைக்கூக்களை எழுதினார்! குஜராத்தியிலும், உருதுவிலும் நிறைய "கஜல்"(Ghazal) எழுதப்பட்டன - இவை கஜல் கவிதைகளென்றே அழைக்கப்பட்டன!
தமிழில் மகாகவியும் பாரதிதசனும் இதை வெகுவாக் ஆமோதித்தாலும், இவற்றை தமிழிலக்கியத்தில் பெருமளவில் இயற்றியவர் கவிஞர் அமுதபாரதி(அ) "அமுதன்" ஆவார்! இந்த மரபையொத்து வெகு முன்னரே தமிழில் கவிதைகள் எழுதப்பட்டன - 3000 வருடங்களுக்கு முன்னால் "குறுந்தொகையும்", 2000 வருடங்களுக்கு முன்னால் "திருக்குறளும்", 1000 வருடங்களுக்கு முன்னால் "ஆத்திச்சூடியும்" ஹைக்கூவை போல் எழுதப்பட்டவையே!
இதில் விதிவிலக்காயில்லாமல் நான் இயற்றிய சில ஹைக்கூக்கள் இதோ இங்கே: -
1. விருந்தோம்பல்:
உயிர் கொடுத்தாவது விருந்தினரை உபசரி - கறி குழம்பில் "சிக்கன்"
2. நாணமின்மை:
ஆடையின்றி வெட்கமில்லாமல் நின்றான் - மேகங்களற்ற "வானம்"
3. முனகல்:
என்னை வெட்டி எறிந்து குடைந்துவிட்டான் என்று
தன்னிடம் வந்த காற்றிடம் அழகாய் முனகியது மூங்கில் - "புல்லாங்குழல்"
4. இழப்பு:
பொழுதுபோக்கிற்காக சீட்டு ஆடி மொத்தமாய் இழந்தான்
-பணத்தையும் "நட்பையும்"
5. அடி:
ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ சிகாமணி -
அழகாய் சிரித்தான் "சிற்பமாய்"
6. கவனம்:
உன்னிப்பாய் கவனி என்ற ஆசிரியர் சொல்
கேட்டு உன்னிப்பாய் கவனித்தான் மாணவன் - "ஜன்னல் வெளியே மேகம்"

Labels: haiku, pudhu kavidhai