Sunday, August 20, 2006
வளமையான் இந்தியாவிற்காக!!
Fellow blogger friends. My project is moving on to a critical phase over the next two weeks, so I may not write frequently for the next 2 weeks. So I wanted to write this post in Tamil, people who know tamil read it as usual, leave your comments and have a terrific week ahead! :)

"எனது வீடு, எனது வாசல் என்ற வாழ்க்கை நியாயமா!?", என்ற எண்ணம் என்னை வெகு நாளாய் துன்புறுத்த, நமது தாய் திருநாட்டை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தபோது(தனி மனிதனின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றுதிக்க) இதோ 10 உருப்(படாத)படையான யோசனைகள்!

1. தெருவில் குப்பை போடுபவர்கள் முகத்தில், தேர்தல் மையினால் "குப்பை பொருக்கி நாய்" என்று பச்சை குத்த படும். அதுமட்டுமில்லாமல், ஒரு மாதம் அவரவர் வசிக்கும் தெருவை தினம் ஒரு மணி நேரம் சுத்தம் செய்ய வேண்டும்! அவர்கள் உற்சாகமாய் வேலை செய்ய ஒலிநாடா மூலம
"ஒமாகஷியா குப்பை பொருக்கி நாயா குப்பை பொருக்கி நாயா" என்று காக்க காக்க ஸ்டைலில் பாடல் ஒளிபரப்ப படும்!
2. வகுப்பறைகளில் திருட்டுத்தனமாய்
"கற்க கசடற கல்கி குமுதம் - அதன்பின்
விற்க பாதி விலைக்கு!"
என்ற கொள்கை கொண்டு, பலப்பல புத்தகங்களை படிக்கும் மணவ மாணவிகள் கடுமையாக தண்டிக்கபடுவார்கள்! அப்படி பிடிபடுபவர்கள் - தங்கள் வட்டத்தில் படிப்பறிப்வில்லாத ஏழை சிறார்களுக்கு இலவசமாய் 6 மாதம் பாடம் சொல்லித்தர வேண்டும்!
3. டாவடிப்பவர்களும் தண்டிக்கபடுவார்கள்! பெண்களை டாவடிக்கும் ஆண்கள் தான் டாவடித்த பெண்ணின் காலில் காலையும் மாலையும் 10 முறை ஷாஷ்டங்கமாய் நமஸ்காரம் செய்ய வேண்டும்! இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்வதன் மூலம் அவர்கள் அம்மாவின் ஆசி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! ஆண்களை டாவடிக்கும் பெண்கள் தினமும் காலை 500 புள்ளி கோலம் போடவேண்டும்! இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்வதன் மூலம் - Pizza தின்று கொழுப்பேறிய அவர்கள் உடல் குறைவதோடு இல்லாமல், நமது பாரம்பரியம் காக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்!
4. சாப்பாடை வீணாக்குவர்கள், "தினம் ஒரு குறள்" போல தினம் ஒரு உரல் மாவு அரைக்க வேண்டும்! அவர்கள் உற்சாகமாய் மாவரைக்க
" அரிது அரிது தோசை மாவை அரைத்தல் அரிது - அதனினும் அரிது
புழுக்கள் நீங்கிய நல்ல மாவை அரைத்தல் அரிது!" என்று அவ்வையாரின் வழியில் பாடல் ஒளிபரப்பபடும்! இப்படி அரைத்த மாவை உணவகங்களுக்கு சென்று விற்க வேண்டும் - இதன் மூலம் வியாபார உத்திகளையும்(Business Management) கற்றுக்கொள்வார்கள்!
5. கண்ட இடங்களில் உச்சா போபவர்கள் கடுமையாக் துண்டிக்க -மன்னிக்கவும் தண்டிக்கபடுவார்கள்! அப்படி பிடிபவர்கள் ஒரு மாதம் மாட்டுத்தொழுவத்தில் சாணி அள்ள வேண்டும்! இந்த ஒரு மாத காலத்தில் மாடு மூச்சா போனால் TR style'லில்
"ஒண்ணுக்கு போகாது மண்ணுக்கு,
தீர்த்தமடா என் கண்ணுக்கு!"
என்று பாடியவாறே கண்களில் கோநீரை ஒற்றிக்கொள்ள வேண்டும்! இவ்வாறு செய்வதன் மூலம் "சுத்தம் சோறு போடும், கூடவே கழிவும் போடும்" என்பதை உணர்வார்கள்!
6. குழாயடி சண்டையில் வல்லுனர்களாய் விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரிகளை தேர்ந்தெடுத்து "கும்மாங்குத்து கண்ணம்மா" என்ற 30 நாள் இராணுவ பயிற்சி கொடுக்க படும்! அப்பயிற்சியின்போது,
"யுத்தமோ உயிரை எடுக்கலாம்,
ரத்தமோ தந்தால் உயிரைக் காக்கலாம்,
சத்தமே கிழிக்கும் காதுகளை -
நித்தமே வேண்டும் இத்திருநாட்டில் அமைதி!"
என்ற தேசப்பற்று மிக்க பாடல் கற்றுக்கொடுக்கப்படுவார்கள்! இதன்மூலம் அவர்கள் தேசப்பற்று அதிகமாவதுடன், "மாதர் தம்மை இழிவு செய்யும் மடையர்களையும்" பந்தாடலாம்!
7. ரிக்ஷாகாரர்களோ,கூலித்தொழிலாளிகளோ, ஆட்டோ ஓட்டுனர்களோ தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு படிக்க அனுப்பினால் அவர்களுக்கு மானியமாக 500 ரூபாய் மாதம் வழங்கப்படும்!
8. முதியவர்களுக்கு நிதியுதவி செய்யும் நல்லுள்ளங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்!
9. நம் நாட்டை காக்கும் முக்கிய பொருப்பு காவல்துறை அதிகாரிகளுக்குண்டு. அவர்களின் ஊதியத்தை உயர்த்தி, தொப்பையை குறைத்து, லஞ்சம் வாங்காது, வாங்குபவர்களை காட்டிக்கொடுத்து நேர்மையாக பணிபுரிபவர்களுக்கு மாதமொரு முறை வட்ட வாரியாக "வீரப்பதக்கம்" அளிக்கலாம்! அதுபோல, ஆசிரியர்களின் ஊதியத்தையும் உயர்த்த வேண்டும்! மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தில் 3% ஆசிரியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்க வேண்டும்!
10. மனதிலுறுதி இருந்தால் மட்டும் போதாது, உடலிலும் உறுதி வேண்டும்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டாய உடற்பயிற்சி வேண்டும்! நாளைய சமுதாயம் வளமையாய் மாற, மன உறுதி மட்டும் போதாது - உடலுறுதியும் வேண்டும்!
 
posted by Prasanna Parameswaran at 6:27 PM |


15 Comments:


At 8:51 PM, Anonymous Anonymous

I am glad that you have not come up with an idea for people who blog :-)

dont share this with tamil / telgu directors you may find this taking shape as a movie

Jokes apart i personally feel as a country we are on track now what we dont have a leader to lead us

If we can find one leader india will be totally different country

or one of us should lead from the front instead of waiting for some to come from heaven and lead us

Love
MAri

Insanity and sanity are one and the same

 

At 5:06 AM, Blogger Priya

IA: Your brain works in all directions. Good one.
Take care and don't stress a lot.

 

At 11:18 AM, Blogger Keshi

alritey then :(

Keshi.

 

At 1:27 PM, Blogger The Lil fairy & her angel friends

aah thats so bad:( we cannot reda the post:)

 

At 1:40 PM, Blogger The Lil fairy & her angel friends

aah thats so bad:( we cannot reda the post:)

 

At 2:08 PM, Blogger Preethe

Hi Prasanna

Ippadiyellam kooda yosikka mudiyumaannu me still wondering..

Good one.

 

At 2:11 PM, Blogger ambi

superrrrrrrrr. ore oru pointaa thaviraa! athu enna point?nu neeye unnai kettukoo! coz neeyum panriyee athai! :) LOL

 

At 7:13 PM, Blogger smiley

nall yosanai :)all the best in ur project work :)

 

At 9:36 AM, Blogger Prasanna Parameswaran

Thanks for all ur comments! I wish to thank everyone of you individually, but as usual in a hurry to type this! I will try to post more in English going forward !

 

At 12:49 PM, Blogger Jeevan

good sugessions! i like the 6, 7 and 8. nenga mattum aatchiku vanthinga pavam intha daavvadikera pasanalum ponungalum. :) My wishes for ur priject.

 

At 11:58 PM, Blogger Prasanna Parameswaran

Jeevan: nandri! andha 3 point ezhudum podhu enakke romba kashtama dhaan irunhadhu - iru dhaalum enna panradhu ezhudittaen! :) Dhanks pa! namakku aatchiyellam othu varadhu!

Veda: nandri! unmaiyaa sollanumna unga kavidhaigaldhaan top! short and sweet'a ezhudareenga! everytime u publish a poem i think aduthuu enna kavidhai ezhuda porangannu! - but u always write in one same area (romance and girl/guys thoughts) adha thandiyum ezhudeenganna nalla irukkumo! antha kavidhai pooti naan paarthen, still dont have time( :) naalla nondi saaku)- sure will pass on this message!

 

At 9:23 AM, Blogger Prasanna Parameswaran

@ Veda: adhu appadi kedayadhu. your one blog was for poems, the other one was day to day activities(maadhiri enakku thonichu) vera enna peru vekkardhunnu theriyala to differentiate - so appadi vechuttaen :) neenga enna avalavu pesarenannu kettuteenga! pechudhan vazhkaikku azhage! vayasanadhukku appuramum life intersting'a pordukku karaname gossip'dhan! BTW i also wrote a poem and ila adha publish pannittar in thamizhsangam! thanks to u for that! so neenga ezhudana kavidhai edhu adhula!??

 

At 4:32 PM, Blogger Prasanna Parameswaran

illa! ennudaiyadhu #15

 

At 8:54 PM, Blogger Prasanna Parameswaran

நன்றி உஷா! நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! நான் இன்னொரு கவிதையும் எழுதியிருக்கேன்! அது நாளைக்கு பதிவுல வரும்னு நினைக்கிறேன்!

It starts like this -
"விதை விதைத்து, களை புடுங்கி, உரமிட்டு, ஆடவரும் பெண்டிரும்....

 

At 6:10 PM, Blogger Prasanna Parameswaran

@ Veda: ungaloda 2-vadhu kavidhaiyum nalla irukku! keep writing!