Ok This is a story I'm writing about a Widows life and the changes that she goes through over the course of time. I'm planning to write this in 3-4 parts. Those who know Tamil read through it and leave me your comments. If you want to continue writing this story you are also welcome. Let me know whatever you feel in the comments section!
47D திருவான்மியூர்- அம்பத்தூர் பேருந்து! ஏதோ ஒரு படத்துல "மலை முழுங்கி மகாதேவன்"-னு ஒரு பாத்திரம் வரும், போட போட தின்னுகிட்டே இருப்பாரு! அதமாதிரி எத்தனை பேரு ஏறினாலும் எல்லாரையும் ஏத்திக்கிட்டு "ரிக்கெட்ஸ்" வந்தா வளைஞ்சு ஒரு ஓரமா நடக்கற மனுஷன மாதிரி, இடது பக்கமா சாய்ஞ்சுகிட்டே போகும், கடைசி வரைக்கும்! அப்பப்பா! எப்படிதான் இவ்வளவு ஜனங்களோ! மொத்த ஜனத்தொகை 7.6 மில்லியன், அதுல ஒரு 70 சதவிகிதம் பேருந்துல பயணம் செய்யறவங்கன்னு வெச்சுகிட்டா 5.3 மில்லியன் மக்கள் தினமும் பிரயாணம் செய்யறாங்க அம்மாடியோவ்! இந்த கூட்டத்தில இடிமன்னர்கள் கிட்ட மாட்டி "பாங்கு" போய் சேர்றதுக்குள்ள பாதி உசுரு போயிடுது. என்னொட அக்குளும், உள்பாவாடையும் வேர்வையால நனைஞ்சு, கச கசன்னு சீட்டுக்கு வந்து உக்காரும் போது பாதி பொறுமை போய், ஒரு மாதிரியான எரிச்சல்தான் வருது! என்கிட்ட ஒரு வினோதமான பழக்கம் உண்டு - எப்பலாம் எரிச்சலா இருக்கோ, என்னொட கோபத்தை திசை திருப்ப ஒரு ஹைக்கூ எழுதுவேன்! இப்பவும் அப்படித்தான் ஒண்ணு தோணுது!
இடிமுழக்கம்!
மேகங்களின் இடிமுழக்கதினில் வியந்து,
வானம் கண்ணீர் விட்டது - "மழையாய்"
பேருந்தில் இடியின் முழக்கதினில் பயந்து,
தேகம் கண்ணீர் விட்டது - "வியர்வையாய்"
மானேஜர் "பலராம்", பேருலதான் பலம் இருக்கே தவிர மனுஷன் பூஞ்சை காளான் மாதிரி இருப்பார்! அவரோட அறையின் கதவுல "பலராமன். எம்.டி"-ன்னு ஒரு பலகை இருக்கும். ஹம்ம்ம்! எனக்கும் ஆசைதான் இந்த மாதிரி "வானதி,பி.ஈ"-ன்னு போட்டுக்க! எங்க! இந்த ஹைக்கூவ எழுதி முடிச்சிட்டு நிமிர்ந்து பாக்கறேன் -க்ளார்க் தண்டபானி காவி பல்லு தெரிய அசடு வழியர்து! ஆண்டவா! இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்காங்க! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி பெண்களை போக பொருளா பார்த்து பல்லு இளிப்பாங்க! மறுபடியும் எனக்கு எரிச்சல் வந்துடும் போல இருக்கே!
"என்ன சார்?"
"ஒண்ணுமில்லமா! நீ கவிதை எழுதறியா?? அதான் என்னன்னு பார்க்கலாமுன்னு! ஹி ஹி! எங்க காட்டு பார்க்கலாம்"-ன்னு சொல்லிட்டு என் கைய தடவின்டே நோட்ட எடுத்தாரு!
என்னோட கோபம் தலைக்கு ஏற, வெடுக்குனு அவர பார்த்தேன். அவரோட பார்வை என் மூஞ்சில இல்லாம என் கழுத்துக்கு கீழ இருக்கிறத பார்த்துட்டு, எனக்குள்ள 1000 குருக்ஷேத்திரமே நடக்கிற அளவுக்கு ரவுத்திரம் பொங்க, அங்க இருக்க முடியாம வெளில வந்து "ஓன்னு" அழறேன்! நான் எதுக்கு அழனும், தப்பு பண்ணது அவருதானே! ஏன் எனக்கு இந்த மாதிரி சண்டாளங்களை எதிர்த்து கேக்கற சக்தி இல்ல! இல்ல இது என்னோட இயலாமையா! முண்டாசு கவியே
"நிமிர்ந்த நெஞ்சமும், நேர் கொண்ட பார்வையும்'-ன்னு நீ பெண்களுக்கு சொன்னா மாதிரி தெரியலை! பெண்ணை நிமிர்ந்து, நேராய் கண்ணை பார்த்து பேச வேண்டும் ஆண்கள்-ன்னு நீ சொல்ல வந்தத இவங்க தப்பா புரிஞ்சுகிட்டங்களோ என்னவோ? சுரேஷ் நீங்க இன்னிக்கி உயிரோட இருந்தா இதெல்லாம் நடக்குமா! இன்னியோட ரெண்டு வருஷமாகியிருக்கும் கல்யாணமாகி! அதுக்கு எனக்கு குடுத்து வெக்கலை ஒரு வருஷத்துலேயே போய் சேர்ந்துட்டீங்க! விதவைதானே, இவளுக்கு ஏது நாதின்கிற திமிருடா உங்களுக்கு! மார்பையா பார்க்கிற பன்னாடை! இரு உனக்கு வெக்கறேன் வேட்டு!
நேரா அவரோட சீட்டுக்கு போய், ஆபீசே கேக்கற மாதிரி கத்தி சொன்னேன்
"சார்! உங்களுக்கு என்னோட கவிதைதானே வேணும்! இந்தாங்க நோட்டு! பாவம் வயசாயிடுச்சு உங்களுக்கு! நோட்ட புடிக்கறதுக்கு பதிலா என்னோட கைய புடிச்சுட்டீங்க! கண்ணு வேற சரியா தெரியலை! என்னோட மூஞ்சிய பார்க்கிறதுக்கு பதிலா கழுத்துக்கு கீழ பார்க்கறீங்க! நாளைலேருந்து உங்க பொண்ணையும் கூட்டிக்கிட்டு வந்துருங்க! பாவம் எனக்கு தெரியும் நீங்க என்னை உங்க பொண்ணு மாதிரிதான் நினைக்கறீங்கன்னு! ஆனா அடுத்தவங்களுக்கு தெரியாதுல்ல! உங்க பொண்ணு உங்ககூட ஒத்தாசையா இருப்பாங்க!"
நான் கத்தின கத்தல ஆபீசே பார்க்க, தண்டபானி என்கிட்ட மெதுவா "என்னை மன்னிச்சுடுமா! இனிமேல இதுமாதிரி செய்ய மாட்டேன்னு" தலை குனிஞ்சுன்டே சொன்னாரு!
மறுபடியும் என்னோட சீட்டுக்கு வந்த போது மனசுல வேலை ஓடலை, தினத்தந்தியை படிக்க ஆரம்பிச்சேன்! அதுல மணமகள் தேவை-ன்கிற பகுதில ஒரு வித்தியாசமான விண்ணப்பம் பார்த்தேன்
" சத்யம் கம்ப்யூட்டர்ஸில் பணிபுரியும், 28 வயது நிரம்பிய,சமுதாய வளர்ச்சியில் ஆசையுடைய, வத்தல் வாசு(எ) வாசுதேவனாகிய நான், இந்து மதத்தை சேர்ந்த, வித விதமான கனவும், ரசனையுமுடைய விதவை பெண்ணையோ, உடலில் ஊனமிருந்தாலும், மனதில் ஊனமில்லாத பெண்ணையோ மணமுடிக்க விரும்புகிறேன். மேற்கொண்டு விவரங்களுக்கு ............."
இத நான் படிச்சு முடிக்கறதுக்குள் என்னோட தொலைபேசி சிணுங்க, எடுத்தால் அப்பா!
"என்னப்பா!"
"அம்மாடி! இன்னிக்கி தினத்தந்தி பார்த்தியாமா!? மணமகள் தேவைன்கிற பகுதில வாசுங்கிறவரு விண்ணப்பம் கொடுத்துருக்காரு! நாளைக்கு சனிக்கிழமைதானே போய் பார்த்துட்டு வந்துருமா!"
"சரிப்பா!"-ன்னு சொல்லிட்டு போனை வெச்சேன்!
இளவயதிலேயே விதவையாட்டேனேங்கிற கவலை அப்பாக்கு! பெண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணுமேன்கிற கவலை அவருக்கு! இந்த தொத்தலோ வத்தலோ - இவன் மட்டும் என்ன புதுசாவா இருக்க போறான், எல்லா ஆண்களும் வெளிப்படையா வழிவாங்க, இல்லனா தன்னை உயர்த்தி காமிக்கனும்னு நினைப்பாங்க, இவரு மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? சரி அப்பவோட ஆசைக்கு வேண்டி நாளைக்கு போய் பார்த்துட்டு வர வேண்டியதுதான்!
End of part 1
At 10:37 PM,
At 7:46 AM, Prasanna Parameswaran
veda: thanks!
itchingtowrite: Welcome here and thanks do come again
Keshi: nandri! :)
KK: yov! idhu onnudhan enna makkal kekkama irundhaanga ippa idhayum neenga kettuteengala! (nalla vela eunuch'na kekkama irundheengale adhuverakkum sandhosam! :))
Syam, Priya: nandri. adhuthu endha gear'la poga pogdhunu theriyala
Anon: thanks! enakku eppavume simple'a ezhuda thaan theriyum enna naan ilakkiyathula weak! :) next time please leave your name!
Pria: he he! nalla commedy panreenga, naan onnum awareness-ellam try pannala, edho thonradha ezhudaraen avvalvudhaan! anyway thanks for ur comments!
At 5:07 PM,
chp travel advisory willits http://icej.eu/home/alpharetta-ga-home-for-sale-by-owner business travel role [url=http://icej.eu/bathroom/atlanta-falcon-themed-bathroom-sets]atlanta falcon themed bathroom sets[/url]
family travel the us http://icej.eu/window/import-window-motors discount student travel [url=http://icej.eu/concrete/ceramic-tile-over-concrete-patios]key west travel deals[/url]
new hampshire used travel trailers http://icej.eu/decoration/bling-theme-decoration list of travel agents [url=http://icej.eu/decor/rustic-star-decor]rustic star decor[/url]
philadelphia daily news travel show http://icej.eu/decor/cheesecake-factory-decor graco quattro tour travel system in graham [url=http://icej.eu/window/window-upgrade-to-xp]canary island adventure travel co[/url]
home based business and travel agency or travel agent 3 http://icej.eu/moving/forearm-forklift-moving-straps softy travel silky baby [url=http://icej.eu/senior-care/senior-care-unit-alliance-community-hospital]senior care unit alliance community hospital[/url]
travel regulations for mexico http://icej.eu/decoration/uscentaf-udpu-award-decoration-processing-unit international health travel insurance [url=http://icej.eu/storage/hanging-knife-storage]coachman travel trailer floor plan[/url]
At 4:05 PM,
online pharmacy guide http://women-health.kqv.in/geisinger-health-plans weinert northvale pharmacy new jersey [url=http://depressions.kqv.in/when-did-the-great-depression-start]when did the great depression start[/url]
california state pharmacy liscense http://women-health.kqv.in/cox-communications-discovery-health-channel what is an exemptee license illinois state board of pharmacy [url=http://heart-medicine.kqv.in/heart-attack-and-cheese-comics-cartoons-clipart]xanax online pharmacy[/url]
online pharmacy no prescription lorazepam ativan next day deliv http://health-centers.kqv.in/definition-of-holistic-health sgmc pharmacy [url=http://depression.kqv.in/depression-and-the-full-moon]depression and the full moon[/url]
drugs online pharmacy http://health-life.kqv.in/analysis-of-the-health-promotion-model keywords online pharmacy [url=http://heart-rate.kqv.in/youll-be-in-my-heart-lyrics]savon pharmacy delaware[/url]
uf pharmacy school online http://blood-cell.kqv.in/blood-brothrs giant eafle pharmacy [url=http://diabetes-type.kqv.in/medical-studies-on-diabetes-healing-foods]medical studies on diabetes healing foods[/url]
tiaunna pharmacy http://diets.kqv.in/soouth-beach-diet nevada pharmacy technician [url=http://health-centers.kqv.in/halloween-health-safty-issues]online pharmacy adderl[/url]