Thursday, September 14, 2006
மீண்டும் மலரும் பூக்கள்! - பகுதி - II

'ரகளை' ரவி (எ) ரவிகுமார், 'கூல்' கலா (எ) கலாவதி, 'பீட்டர்' அல்லது 'பகாசுரன்' பாலா(எ) பாலாஜி, அப்புறம் 'வத்தல்' வாசு(எ) வாசுதேவனாகிய நான். ஒரு நூறு குழந்தைகள் ஒண்ணா சிரிச்சா, எப்படி இருக்கும்! அப்படி ஒரு குதூகலமான பட்டாளம் எங்களுடையது! எல்லாரும் ஒண்ணா சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ல வேலை பார்க்கிறோம்!
'பீட்டர்' அல்லது 'பகாசுரன்' பாலா(எ) பாலாஜி - இவன்தான் எங்க பட்டாளத்துல கடைகுட்டி. கழுதை மாதிரி 25 வயசு ஆகுது, ஆனா இன்னும் மனசுக்குள்ள விடலை பையன்னு நினைப்பு! அது வயிறா இல்ல கஜானாவான்னு தெரியலை, தின்னுகிட்டே இருப்பான்! பார்க்கிறதுக்கு அடியாள் மாதிரி இருந்தாலும், சரியான பையந்தாங்கொள்ளி! இவன் படிச்சது எம்.சி.ஏ, "அமிர்தானந்தமயி பல்கலைகழகம்" கோவையில. ஆண்கள் பள்ளில படிச்சதனாலோ என்னவோ, எப்பபாரு பெண்களிடம் வழியர்துதான் இவனோட தலையாய கடமையே! உலகத்துல இருக்கிற எல்லா பெண்களும் தன்னை நினைக்கனுமேன்னு ஏகத்துக்கு புருடா விடுவதில் கில்லாடி! அதனாலேயே 'பீட்டர்' அல்லது 'பகாசுரன்' பாலா-ன்னு இவனுக்கு பேரு!


இவ்வளவு ஏன், "என்னை பகாசுரன் பாலா-ன்னு கூப்பிடாதீங்க! பகா பாலா-ன்னு கூப்பிடுங்க. அப்பதான் பெண்களிடம் பயங்கர கலையார்வமுடைய பாலா-ன்னு அறிமுகபடுத்திக்க முடியும்"-னு பீட்டர் விட்டான்னா பாருங்களேன்!

'ரகளை' ரவி (எ) ரவிகுமார் - இவன்தான் எங்க பட்டாளத்தோட தலைவன்! 27 வயசு, எஸ்.ஃப்.ஸ் காலேஜ், பாட்னாவுல பி.ஈ படிச்சான், நல்ல தமாஷ் பேர்வழி, அதேசமயம் அவனுடைய அறுவை நகைச்சுவைகளால இரத்தமே வரும்! சரியான கடி மன்னன்!

அதென்ன "எஸ்.ஃப்.ஸ் காலேஜா? அப்படி ஒரு காலேஜ் இருக்கானா?"-ன்னு கேட்டதுக்கு "ஆமான்டா! college for Sexually Frustrated Students-ன்னு ஹாஸ்யமா அவன் சொன்னத இன்னிக்கும் மறக்க மாட்டேன்! முதல் முறையா, அமெரிக்கா போய் திரும்பி வந்ததும், நாங்க கேட்டோம் " அமெரிக்கா போனியே! சுத்தி பார்த்தியா?" அதுக்கு அவனோட வழக்கமான தோரணைல "சுத்திதான் இங்கயே கிடைக்குதே, அத எதுக்கு நான் அமெரிக்கால போய் பார்க்கனும்?" -னு அறுத்தான் பார்க்கனுமே, அத இன்னிக்கு நினைச்சா கூட இரத்தம் வரும்! ஆனா அடுத்தவங்களை கிண்டலடிப்பதில் இவன மிஞ்ச முடியாது! எங்க எல்லாருக்கும் பட்டபெயர் சூட்டியதில்லாமல், தனக்குதானே பெயர் வைத்துக்கொண்ட முதல் ஆள்!

இவன் வெச்ச பட்ட பெயரை, கேட்கும்போதே சிரிப்பா இருக்கும் :
"காத்து" கவிதா - ஒல்லியா இருக்கறதுனால, "சேமியா" சவுமியா அவளும் ஒல்லியா இருக்கறதுனால, "கரடி" கணேஷ், கரடி மாதிரி கைலயும், மார்புலயும் ஒரே ரோமம் இருக்கறதுனால, "சொர்ணமால்யா" சுந்தர் எப்பபாரு சொரிஞ்சுகிட்டே இருக்கறதுனால, "கோணவாய்" கோகிலா வாய் கிழிய பேசறதுனால, "மொச்சுக்கு" மகேஷ் சாப்பிடும்போது பன்னி குறட்டை விட்டா மாதிரி சத்தம் பண்றதுனால, "ஷகிலா" சரவணன் ஷகிலா மாதிரி குண்டா இருந்துகிட்டு, சட்டை கழுத்து பொத்தானை போடாம வர்றதுனால - இப்படி அவன் பட்டபெயர் வெச்ச ஒரு பெரிய பட்டியலே உண்டு!
இவன் கூட சேர்ந்ததுல நானும் கடிமன்னன் ஆனேன்!

'கூல்' கலா (எ) கலாவதி - எங்க பட்டாளத்தோட தலைவின்னு சொல்லலாம்! 25 வயசு, வேலம்மாள் கல்லூரில பி.ஈ படிச்சா, அசராம பதிலடி கொடுப்பதில் இவளை யாரும் மிஞ்ச முடியாது! அதனாலேயே பேச்சாளரா இருக்காளோ என்னவோ?

பாலா இவ முதல் நாள் வேலைக்கு சேர்ந்தன்னிக்கு
"ஏ கலா கலா, கண்ணடிக்கவா கலக்கலா,நீ வா கலா, இலட்சம் மேக்கப்போட குலுக்கலா"-ன்னு நக்கலடிக்க, அதுக்கு கலா அசராம"ஏ பாலா பாலா, உன் மொகரைய பொளக்கவா, நீ வா பாலா, உன் முதுகெலும்ப நான் சுளுக்கவா" ஒரு போடு போட்டதுல ரவியே ஒரு நிமிடம் அரண்டு போனான்!

'வத்தல்' வாசு(எ) வாசுதேவன் - நான் எங்க பட்டாளத்துல பெரியவன்! 28 வயசாகுது, கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழகம், சி.ஐ.டி'-ன்கிற பிரபலமான கல்லூரில எம்.எஸ்.சி படிச்சேன்! கதை, கவிதை எழுதறது என்னோட பொழுதுபோக்கு! என்னோட அப்பா, அம்மா விஷாகபட்டணத்தில இருக்காங்க! என்னோட அம்மா ஒரு நாட்டுக்கட்டை, என்னடா இவன் இப்படி சொல்றானேன்னு யோசிக்கறீங்களா! தேக்கு மரத்திலேயே மிக உயர்ந்த வகைய "நாட்டுக்கட்டை"-ன்னு சொல்வாங்க! மேற்கு தொடர்ச்சி மலைகள்ல வளரும் இந்த மரங்களின் தோட்டத்தில் நிறைய "கேரளத்து பெண்குட்டிகள்" வேலை செய்வதனால, இந்த பெயர் மருவி மாறியதோ என்னவோ! ஆனா என்னோட அம்மா ஒரு உயர்ந்த சிந்தனையாளர்! இன்னிக்கு இந்த அளவுக்கு நல்ல நிலைமல நான் இருக்கறதுக்கு காரணமே அவங்கதான்!

12 இல்ல 13 வயசு இருக்கும், ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தோம்! எல்லாரும் வெத்தலை சீவல் போடறத பார்த்துட்டு ஆசையில நானும் ரெண்டு எடுத்து மென்னுக்கிட்டுருன்தேன்.
இத அம்மா பார்த்ததும்
"இல்லமா! ஆசையாய் இருந்துச்சு, அதான்....." -னு இழுத்தேன்!
அம்மா சிரிச்சுகிட்டே" வாசு! ஆசைதான்டா எல்லா பிரச்சனைக்கும் காரணமே! வாய்தான்டா எல்லாத்துக்கும் காரணமே! இப்படிதான் முதல்ல சீவல்ல ஆரம்பிக்கும், அதுக்கப்புறம், மைசூர் போண்டவும், மசால் தோசைக்கும் மனசு அடிச்சுக்கும்! இப்படியே ருசிக்கு கட்டுப்பட்டு நாக்கு அலையும்! புகை ருசி, சாரய ருசி, பொம்பளை ருசின்னு போகும்! ருசிய ரசிச்சேனா அது உன்ன நசுக்கிடும்! நாளைக்கு அலையாத ஆம்பிளையா இருக்கணும்னா இன்னிக்கி ருசிய கட்டுபடுத்த கத்துக்கோ!" 12 வயசு பையனுக்கு இது ரொம்ப அதீதமான வார்த்தைகள்தான்!
ஆனா அன்னிக்கி அப்படி அம்மா சொன்னது எவ்வளவு நல்லதுன்னு இன்னிக்கி உணருகிறேன்! அந்த வார்த்தைகள் சுருக்குன்னு குத்திச்சு, ரொம்ப யோசிக்க வெச்சுது!

ஒருதடவை பணக்கார நண்பன் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனான்! "உன்னோட ருசி என்னடா? என்ன சாப்பிடறன்னான்!"
"எனக்கு எதுவும் ருசி இல்லடா! எதுனாலும் சரி சாப்பிடறேன். ருசி இல்லாம இருக்கிறதுதான் நல்லது"-ன்னு நான் சொல்லவும்
"என்னது ருசி கிடையாதா? ஏண்டா பச்ச அரிசியை அப்படியே சாப்பிட முடியுமா, இல்ல வேகாத கிழங்குதான் அப்படியே சாப்பிடுவியா!, வாழ்க்கையில ருசிதான்டா மச்சான் முக்கியம்! இதநான் அம்மாகிட்ட சொல்ல, கொத்த வர பாம்பு மாதிரி சீறினாள்
"எவனோ! வெக்கங்கெட்ட பய சொன்னத என்கிட்ட சொல்லாத! வக்கணையா தின்னுட்டு வயத்தால போச்சுன்னா, அந்த மானங்கெட்ட வாய் கேழ்வரகு கஞ்சியும் மருந்தும்தான் கேக்கும்! நான் சமைக்கிறது தப்புன்னு சொல்லலை வாசு, விதவிதமா, சமைச்சு சாப்பிடனும்னு நினைக்காத, உடுத்தறது தப்புன்னு சொல்லலை, உடுத்திக்கிட்டு டாம்பீகமா அலையனும்னு நினைக்காத, பொம்பளையோட குடித்தனம் பண்ணாதன்னு சொல்லலை, பொம்பளைய பத்தி எப்பபாரு நினைச்சுகிட்டுருக்காத!

15 வயசுல இந்த உபதேசம் கூட ரொம்ப அதிகப்படிதான்! தனித்திரு, விழித்திரு-ன்கிற வார்த்தைகளோட உண்மையான அர்த்தம் இப்பதான் புரியுது! மக்களோட இருக்கும்போது, அந்த மக்கள்தான் ஊரு விளைவிப்பார்கள், ஆனா எல்லரும் ஒரு கால கட்டத்துல தனித்து இருக்கனும், அப்ப நம்ம எண்ணங்கள், நம்ம சுதந்திரம்தான் நமக்கு பெரிய கேடு விளைவிக்கும், அதனாலதான் "தனித்திரு விழித்திரு"-ன்னு சொன்னாங்களோ என்னவோ!

17 வயசுல அரைகுறையா மீசை முளைக்க ஆரம்பிச்ச போதுதான் மனசுக்குள்ள ஹார்மோன்களின் கலவரம் அதிகமாச்சு!...

தொடரும்...................

 
posted by Prasanna Parameswaran at 9:59 AM |


10 Comments:


At 10:28 AM, Blogger Prasanna Parameswaran

முதல் பின்னூட்டத்தை நானே போட்டுவிட்டேன்! இத ஒரு குறுநாவலா எழுதலாம்னு நினைக்கிறேன்! நீங்க என்ன நினைக்கறீங்க?? நாயகனும் நாயகியும் அடுத்த பதிவுல சந்திக்கப்போறாங்க!

 

At 8:52 PM, Blogger Syam

இது எல்லாம் நாங்க ஒத்துக்கமாட்டோம்...இது என்ன நமக்கு நாமே திட்டமா முதல் பின்னூட்டத்த நீங்களே போட்டுக்கறதுக்கு :-)

 

At 8:54 PM, Blogger Syam

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...அறுசுவை கலந்து அருமையாக...அறுசுவை என்னனு கேக்காதீங்க...ஒரு பேச்சுக்கு சொன்னேன்.... :-)

CIT ஆ நீங்க...நானும் அங்க தான் ஹோப் காலேஜில் ஒரு 4 yrs குப்பை கொட்டினேன் :-)

 

At 10:13 PM, Blogger Prasanna Parameswaran

@ ச்யாம்: நன்றி! அடப்பாவிகளா! நான் CIT-தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க! என்னோட கதாநாயகன் வேச்சே ஒரு யூகமா! யோவ்! இது கதைதான் நிஜமில்லை! :)

 

At 3:07 AM, Blogger Priya

கதை நல்லா களை கட்டிடுச்சு. கலக்கறீங்க போங்க. ஆனா fiction மாதிரி தெரியலயே...சொந்த கதையயும் கலந்து அடிக்கறீங்க போல இருக்கு..

syam, ஒரு நாளைக்கு எத்தனை புளியோதரை சாப்பிடுவீங்க?

 

At 3:30 AM, Blogger Prasanna Parameswaran

@ Priya: நீங்க வேற! இந்த மாதிரி சொந்த வாழ்க்கையில நடந்த்ருந்தா சந்தோஷ பட்டுருப்பேன்! எல்லாமே கற்பனைதான்! நான் கொஞ்சம் address, phone number- idhellam நியாபகம் வெச்சுக்க கஷ்டப்படுவேன்! அதனால என்க்கு தெரிஞ்ச ஊர் பெயரும், addressum எடுத்து விடுவேன்! அவ்வளவுதான்! :)

 

At 10:01 AM, Blogger KK

Supera poguthu kathai...ana mukiyamana yedathula niruthiteengale... Bala vechi pattu super...Suthi kadi naanum solli iruken... :D
seekiram continue pannunga... :)

 

At 6:59 PM, Blogger Syam

@IA,
//இது கதைதான் நிஜமில்லை//

நம்பிட்டோம் :-)

@priya,
//ஒரு நாளைக்கு எத்தனை புளியோதரை சாப்பிடுவீங்க//

சாப்பாடு தான் முக்கியம் extra இருந்தா freeze பண்ணி வெச்சுக்கலாம் :-)

@வேதா,
//தனித்திரு,பசித்திரு,விழித்திரு//
அது எல்லாம் தெரியாது ஆனா எப்பவும் பசித்திரு தான் :-)

 

At 2:07 AM, Blogger Prasanna Parameswaran

@ KK,Veda: நன்றி! எனக்கும் கதையை சீக்கிரமா தொடரனும்னு ஆசைதான்! நேரமிருக்கும் பொழுது விரைவாம எழுதுகிறேன்!
@ ச்யாம்! அதுக்காக நான் "கதையல்ல நிஜம்" லக்ஷ்மி மாதிரி ஒரு சொட்டு கண்ணீர் விட்டு சத்தியமா பண்ணமுடியும்! நானே புளியோதரைய சாப்பிட்டுடேன்னு உங்களுக்கு கோபம்தானே! சரி அடுத்த பதிவுக்கு சேர்த்து சாப்பிடுங்க! :)

 

At 7:07 PM, Blogger Jeevan

Nalla rasichean, Boys padathoda introduction mathiri irukku neenga ovoruthara arimugam pannathu.

Kalavoda paattu super, ravi udaiya patta pear nachunu irukku.
Vasu amma udaiya arivurai arumai. unga istam naanba, neenga enna ealuthunalum nanga padikka ready.

Looking forward for the Hero, Heroine meeting and love scenes