முதல் பகுதியை படிக்காதவங்க இங்க படிங்க!: பகுதி 1, பகுதி 2
பகுதி இரண்டின் முடிவு:
17 வயசுல அரைகுறையா மீசை முளைக்க ஆரம்பிச்ச போதுதான் மனசுக்குள்ள ஹார்மோன்களின் கலவரம் அதிகமாச்சு!...
இனி.......
அழகா ரெட்டை ஜடை பின்னல் கட்டி பள்ளி செல்லும் மாணவிகளை பார்த்தா மனசுக்குள்ள கிறு-கிறு-ன்னு இருந்துச்சு! பார்க்கும் பெண்ணோட-ல்லாம் பேசனும், அவங்க அழகா தலையாட்டி பேசறத பார்க்கனும்னு தோணுது! என்னடா இப்படி ஒரு அவஸ்தையா இருக்கே! எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கா இல்ல எல்லா ஆண்களும் இந்த வயசுல இப்படிதான் இருந்தாங்களா! அதுவும் சிரிக்கும் பெண் இன்னும் அழகாய் தெரிகிறாள்! அவங்களை சிரிக்க வெக்க மனசுக்குள்ள நானே பேசி ஒத்திகை பார்க்கிறேன்! ஆனா நேரில் பேசுகிறபொழுது வார்த்தைகளற்று அணைக்கட்டி தடுத்த நீரை போல் அமைதியானேன், மனசுக்குள் மடை திறந்த வெள்ளம் போல எண்ணங்கள் ஆர்ப்பரித்தாலும், ஏதோ ஒரு கூச்சம் பிடுங்கி தின்றது!
ஒருநாள் பேருந்தில் செல்கையில், ஓட்டுனர் தீடீரென பேருந்தை நிறுத்த, நிலைதடுமாறி முன்னாலிருந்த பெண்மணியின் மீது விழுந்தேன்!
"தடிமாடு!தடிமாடு! நல்லா வளர்ந்துருக்கியே எருமைமாடு மாதிரி! கைப்பிடியை நல்லா பிடிச்சு நிக்க வேண்டியதுதானே! வந்துட்டாங்க மேல இடிக்கறதுக்குன்னே!"
"என்னை மன்னிச்சுடுங்க! நான் சத்தியமா நிலைதடுமாறிதான் விழுந்துட்டேன்"
என் பரிதாப நிலைமயை பார்த்து, உடன் படிக்கும் மானசா, அவளோட பக்கத்துல உட்காற இடம் கொடுத்தாள்! இயல்பாய் அவள் கரம் என்மேல் உரச, விக்கித்துபோனேன். இவ்வளவு மென்மையா? ஒரு சின்ன குழந்தையின் கன்னத்தை வருடினால் எவ்வளவு மென்மையா இருக்குமோ, ஒரு சிலிர்ப்பு ஏற்படுமோ, அந்தமாதிரி உணர்ந்தேன்! இதோ இப்ப கண்ணாடி முன் நின்று இத எல்லாத்தையும் யோசிச்சு பார்க்கிறேன், அந்த பெண் ஏன் என்ன தடிமாடுன்னு சொன்னா, நான் ஆம்பிளையா, இல்ல பையனா! ஏன் எல்லா பெண்களும் ஆண்கள் பேருந்தில் இடிப்பதற்காகவே வருகிறார்கள் என்று நினைக்கிறார்கள்? அந்த பெண்மணிக்கு ஒரு 40 வயது இருக்குமா, கிட்டத்தட்ட என் அம்மா வயசு! இப்படி பலவாறு நான் யோசித்தவண்ணம் நிலைக்கண்ணாடி முன் நிற்க, அம்மாவின் குரல் என் சிந்தனையை கலைத்தது
"என்னடா வாசு! யாரு அந்த பொண்ணு! எந்த பொண்ணை பத்தி நினைச்சுகிட்டுருக்க?"
ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன்! "எப்படி நான் பெண்ணை நினைக்கிறேன் என்று சரியாக சொன்னாய்"
"உன் வயதை நானும் தாண்டித்தானே வந்தேன்! இந்த வயசுல ஆண்கள் பெண்ணை நினைப்பதும், பெண்கள் ஆணை நினைப்பதும் சகஜம்தானே"
அப்போ பெண்களும் ஆண்களை நின்னைப்பதுண்டா! அப்பாடி! பெருமூச்சு விட்டேன்! எனக்கு மட்டும் கோளாறில்லை!
"வாசு! இந்த வயசுல எல்லா பெண்களும் அழகாதான் தெரிவாங்க! எல்லா பெண்களிடமும் பேசனும், அவங்க சிரிக்கிறத ரசிக்கனும்னு மனசுல தோணும்! அப்படியெ பெண்கள் பின்னாடி போகனும்னு தோணும்! அப்படியே பெண்கள் பின்னாடி போய் ப்ளஸ்டூவுல கோட்டை விட்டேனா ஒரு பெண்ணும் உன்னை திரும்பி கூட பார்க்கமாட்டா! கம்பீரமும், சிந்தனையில் தெளிவுமுடைய ஆண்களைதான் பெண்களுக்கு பிடிக்கும்! என்னங்க இங்க வாங்க-ன்னு அப்பாவை கூப்பிட, அவர் வந்ததும்
"எனக்கு ஒரு முத்தம் குடுங்க - கன்னத்துல!" அப்பாவும் அப்படியே செய்ய, நான் கூச்சத்தில் நெளிந்தேன்!
அம்மா தொடர்ந்தாள் "கூச்சப்படாத வாசு! இது இயற்கையா நடக்கிற ஒன்று! இப்ப உங்க அப்பா எனக்கு முத்தம் கொடுத்தபோது ஏதாவது எனக்கு தோன்றியதா? இல்லியே! ஆனா இவரு என்னை பட்டுக்குட்டி, கன்னுகுட்டி, உன்னை ரொம்ப நேசிக்கிறேன் கண்மனி-ன்னு என்னோட காதருகில் சொல்லும்போது வருகிற கிறக்கம் இருக்கே அப்பப்பா! காமம் கண்னுலயும், காதல் எண்ணத்துலயும் இருந்தா வாழ்க்கையே இனிக்கும்! இந்த பருவத்துல பெண்களை பத்தி நினைக்கனும்னு தோணும், ஆனா எப்பபாரு அதையே நினைக்காத! எல்லாமே நம் எண்ணங்களில்தான் இருக்கு! உன் எண்ணத்தை திசை திருப்பு! ஒரு விஷயத்தை பத்தி ரொம்ப யோசிக்க யோசிக்கதான் அதுமேல் ஆர்வம் அதிகமாகும்! உனக்கு தமிழ் பிடிக்குமில்லையா!
"ஆமாம்மா! "
"நிறைய படி! தமிழ் புராணங்கள்லயும், வரலாறுலயும் இல்லாத விஷயமே கிடையாது! படிக்கும்போது புரிஞ்சு படிக்க பாரு! ஈடுபாட்டோட படிக்கும்போது மனசு கவனம் சிதறாது! அப்பரோட மாசில் வீணையும் தெரியுமில்லையா, உன்னோட பாடத்துல வருதே, எங்க சொல்லு பார்ப்போம்!
"மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்,
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே, ஈச னென்த னிணையடி நீழலே!"
"அதுக்கென்ன அர்த்தம்?"
"சரியா தெரியலைமா!"
"ம்ம்ம்! மாசு - குற்றம் மாசு+இல்-னா - குற்றமில்லாத-ன்னு அர்த்தம். அழகான மாலை நேரத்துல, எந்த குறையுமில்லாத வீணையில்லிருந்து வரும் அழகான நாதத்தை போலவும், இளவேனிற் காலத்தில் வீசும் அழகான தென்றல போல குளிர்ச்சியாகவும், பெரிய குளத்தில் வட்டமிடும் அழகான வண்டின் ரீங்காரத்தை போலவும், நான் உணருகிறேன் இறைவனின் புகழை பாடும் போது! இதுதான் அதோட அர்த்தம்! எந்தவொரு காரியத்தை செய்யும்போது கூர்ந்து கவனி, அடுத்தவரிடம் பேசுகின்ற பொழுது கூர்ந்து கவனி. பெண்னின் கண்ணை பார்த்து பேசு! அவளும் இந்த சமுதாயத்தின் சரிபாதின்னு புரியும். வாழ்க்கையில ஜெயிக்கனும்னா போராடனும், நிறைய அடி வாங்கனும், அழகான் சிலையை பார்க்கிறோமே, அத ஒரே நாள்-ல செய்யறதில்லை.உளியால் அடிபட்டு அடிபட்டுதான் அழகாகும்! அந்த மாதிரிதான் வாழ்க்கையும்!
பெண்ணை பற்றி நீ முழுதாக புரிந்துகொண்டால்தான், பெண்ணை காமமாக பார்ப்பதை நிறுத்தமுடியும்! ஆண்கள் பெண்கள் மீது உடலளவில் கவர்ச்சி கொள்வது போல, பெண்களுக்கு ஆண்கள் மீது கவர்ச்சி வருவது கிடையாது! அதுக்கு காரணம், நம்ம சமுதாயத்தின் வளர்ப்பு முறைதான், அதுலதான் குறையே இருக்கு! ஒரு பெண் தன்னோட வீட்டுல இருக்குபோது வெற்றுடம்போட தன்னோட அப்பாவை பார்க்கிறாள், அதனால எந்த கிளர்ச்சியும் வருவது கிடையாது! ஆனா ஒரு பெண்ணோட மார்பகங்களை பற்றி பள்ளியிலோ, கல்லூரியிலோ யாருமே சொல்லித்தருவதில்லை! ஒரு விஷயத்தை மறைக்க மறைக்கதான் அதன்மேல் ஈடுபாடு அதிகமாகும்! அதனாலதான் முதல்முறையா ஒரு பெண்ணோட மார்பை பார்க்கும்போது பெரும்பாலான ஆண்கள் வாயை பிளந்து பார்க்கிறார்கள்!
பெண்கள் வயசுக்கு வந்துட்டான்னு சொல்வாங்க. அதாவது "puberty". சில பெண்கள் 9-10 வயசுலேயெ பூப்படைவார்கள், சில பெண்கள் 12-13 வயசுல ஏன் அதுக்கும் மேல் கூட பூப்படைவாங்க! பெண்களோட உடம்புல ரெண்டு ஹார்மோன்கள் உருவாகும் : ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜிஸ்டரோன். ஆண்களும் வயசுக்கு வருவாங்க, அது பொதுவா 12-13 வயசுல நடக்கிற விஷயம்! ஆண்களோட உடம்புல ஒரு ஹார்மோன் ஒருவாகும்: டெஸ்ட்ரோஸ்டிரோன்! இந்த ஹார்மோன்கள் எங்கருந்து உருவாகுது தெரியுமா - மூளைலேருந்து கட்டளைகளா. ஒவ்வொரு மாதமும் பெண்ணின் ஓவரியில்(ovary) ஒரு சினை(முட்டை) உருவாகும்! அங்க உருவான் சினை மெல்ல நகர்ந்து கருப்பைக்கு(uterus) வரும். கருப்பையில ஆணிண் விந்தோடு(sperm) இணைந்தால் ஒரு உயிர் ஜனிக்கும்! இரவு 8 மணி நேரம் தூங்கறதுக்கே நமக்கு மெத்தை தேவையாயிருக்கே, அங்க ஒரு உயிர் 10 மாதம் இருக்கனும்னா எவ்வளவு கடினமான மெத்தை வேணும்! அந்த மெத்தை மாதிரி தோலும் இரத்தமும் கருப்பைல வளர்றதுக்காகதான் மூளை இந்த ரெண்டு ஹார்மோன்களை கட்டளைகளா மாதா மாதம் கருப்பைக்கு அனுப்பும்! ஆனா பெரும்பாலான நேரங்கள்ல சினை, விந்தோட சேராததுனால, அந்த உபரிகையான இரத்தமும், சதையும் பெண்ணோட மூத்திரப்பாதை வழியா(vagina) வெளியேரும்! இது பொதுவா 28 நாளுக்கு ஒருடவை நடக்கும்! இந்த இரத்த கழிவு தான் நாம் மாதவிடாய்(period)-ன்னு சொல்கிறோம்! புரியுதா வாசு??"
ஆகா! எத்தனை பேருக்கு இப்படி ஒரு அப்பா-அம்மா கிடைப்பாங்க! கிடைத்தற்கரிய பேரு இப்படி ஒரு அம்மா- அப்பா இருக்கறது! இப்படி படிப்படியா என்னை மெருகேற்றியதுனாலதான் இன்னிக்கு ஒரு நல்ல நிலைமயில நான் இருக்கேன்! இதோ இன்னிக்கி இந்த பசுமையான நினைவுகள, அலுவலகத்தில யோசித்துகொண்டிருக்கிறேன்! என்னுடைய சிந்தனையை தொ(ல்)லைபேசி சிணுங்கி கலைத்தது!
"ஹலோ! வாசு பேசறேன்!"
"வாசு வணக்கம்! என் பேரு வானதி! இன்னிக்கு உங்களோட மணமகள் தேவைங்கிற விளம்பரத்தை பார்த்தேன்! நான் உங்களை சந்திக்க வரலாமா?"
"நாளைக்கு சனிக்கிழமைதானே! எப்பவேணும்னாலும் வாங்களேன்! என்னோட முகவரி குறிச்சுக்கறீங்களா? 39/3 ப்ளாட் நம்பர் 5, இராமானுஜம் தெரு, தி.நகர், சென்னை - 600 017"
"சரிங்க நாளைக்கு வர்றேன்! "
வானதி - வித்தியாசமான பேரா இருக்கே! சரி நாளைக்கு பார்க்கலாம் யாரு அவங்கன்னு!......................
தொடரும்......
At 9:32 AM, Prasanna Parameswaran
@ karthik: Thanks welcome here!
@ porkodi: vaanga! neenga solradhu romba nejamga it is really tough to think from a women's perspective! innapa idhu ellarum nejama nejamannu kekkareenga, its only the story pa! :)
@ ambi: sariya soneenga! naan balakumaranoda 4-5 novel padichrukkaen! inga US vandhadhukappuram thamizh'la edhuvume padikka mudiyala! kittathatta our varusham aachu, nalla pusthangangala padichu! deviate agudha! idha vera eppadi ezhudardhunnu theriyala! besides this is my first attempt to write a long story eppadi proceed panradhunnu theriyala! if you want to continue on this you are more than welcome! Besides idha maadhiri ezhudanumna u have to be a full time writer, namakku adhu seri padadhu! :) Thanks for ur frank comments ambi! :)
At 9:53 AM, Prasanna Parameswaran
@ வேதா - நீங்க சொன்ன ரெண்டுமே தப்பு! எங்க அம்மாவும் சரி, வேற எந்த பெண்னும் சரி,இந்த விஷயங்களை சொல்லி தரலை! புஸ்தகங்கள்லேருந்தும் நான் தெரிஞ்சுக்கலை! எல்லமே net'la படிச்சதுதான்! ஆனா ஒரு விஷயம் உண்மை, பெண்மையை பற்றி நிறைய ஆண்களுக்கு தெரியாது, சரி முடிந்தளவு எல்லாரும் தெரிந்து கொள்ளட்டுமேன்னுதான் இத எழுதறேன்! :) காமம்கிறது வாழ்க்கைல ஒரு பகுதிதானே, அத ஏன் எல்லாரும் ஏதோ தீண்டதகாதது மாதிரி பார்க்கிறாங்கன்னு எனக்கு தெரியலை, அதனால தில்லா முடிவு பண்ணேன், இதுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை எழுதிடவேண்டியதுதான்னு! :)
ரொம்ப நல்லா எழுதறீங்க ப்ரசன்னா..professional writer மாதிரி இருக்கு.
நான் நினைச்சத அம்பி சொல்லிட்டார். பாலகுமாரன்+சுஜாதா(science) மாதிரி இருக்கு.
//inga US vandhadhukappuram thamizh'la edhuvume padikka mudiyala!//
நானும் first time அப்படி தான் கை வீசிட்டு வந்துட்டேன். இப்பலாம் india போறப்ப ஒரு 10,12 books கொண்டு வரேன்.
Enna solrathunu thariya! Purinjethu, thariyatha pala vizhaiyangal, romba thaliva iriunthuthu,
Vasukku arumaiyana amma appa kadaichu irukkanga, ippadi ovoru thaium thaan pillai ketta antha antha vayasula avanga purinjekera mathiri sonna, kandipa avanga purinjippanga, athavittut, maraika pakkum poth thaan athumela ulla arvam athigam agum.
Prasanna u have been Tagged:)