Thursday, September 21, 2006
தமிழ்சங்கம் கவிதை போட்டி - என் கவிதைகள்!

தமிழ்சங்கம் நடத்திய கவிதைப் போட்டிக்காக நான் எழுதிய இரண்டு கவிதைகள் (கவிதை எண் - 18 மற்றும் எண் 15-ஆக வெளியிடப்பட்டவை) இதோ இங்கே! தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்". உஷாவுக்கு நன்றி, எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தியதற்காக!

கவிதை - 2
விதை விதைத்து, களை புடுங்கி, உரமிட்டு, ஆடவரும் பெண்டிரும்
ஒன்றாய் உழைத்த பின்னும் - அமோக விளைச்சலின்போது
" மானம் தப்பாது மும்மாரி பொழிஞ்சு காப்பத்திட்டியே சாமி!"
-என்று வானத்தை நோக்கி கைக்கூப்பிய ஏழை குடியானவனின்
ஆனந்த கண்ணீரில் வானத்தின் பிம்பம் கண்டு உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

கதிரவனையே மறைக்கும் வானளாவிய கட்டிடங்களை கண்ட போதும்,
காற்றையே கிழித்துச் செல்லும் வானவூர்தியை கண்ட போதும்,
எண்ணற்ற அறிவியலின் சாகசங்களை கண்ட போதும் - ஏற்படாத மகிழ்ச்சி,
வர்ண ஜாலங்களின் தலைவி வானவில்லை தொடும் தூரத்தில் கண்டு,
குதூகலமாய் கைக்கொட்டி சிரித்த குழந்தையின் புன்சிரிப்பில் மெய்சிலிர்த்து உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

முகம் தெரியாது, பெயர் தெரியாது, ஊர் தெரியாது, உறவு அறியாது
குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்த உயிரை காப்பாற்ற தன் இரத்தத்தை
தந்த என் நண்பனின் கரம்பிடித்து - "வானமும் வையகமும் உள்ளவரை , நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும் தம்பி"
என்று நாதழுத்த அன்னையின் பாசத்தையே மிஞ்சிய மனிதநேயத்தை கண்டு உறைந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

"வெள்ளையும் கருப்புமாகிய நிரந்தர நிறத்தை விடுத்து, வானமே - நீ நீலமானதேனோ?" - என்று நான் வினவ,
"ஆலகால விஷத்தையுண்டு உலகை காத்த சிவன் நீலகண்டனானது போல
நாலுகாலமும் உயிரின் மேன்மைக்காக பாடுபடுமுன் முயற்ச்சியும்,நம்பிக்கையும் கண்டு
உவகையில் பூத்த உள்ளக்களிப்பே இந்த நீலம்" -என்று நீ கூற, திக்குமுக்காடி பிதற்றினேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!!!"
------------------------------------------------------------------------------------------------
கவிதை - 1
சீறிச் சென்ற நதியும், ஓங்கி வளர்ந்த மலையும் - உயிர் தோன்றுவதற்காக மாறியது
தோன்றிய உயிர் - நீரிலிருந்து நிலத்திற்கு, ஊர்வனவாவும் பறப்பனவாவும் - பரிணாம வளர்ச்சிக்காக மாறியது,

பரிணாம வளர்ச்சி குரங்கிலிருந்து மனிதனாய் - சிந்தனை தோன்றுவதற்காக மாறியது
தோன்றிய சிந்தனை - கல்லில் இருந்து கோட்டையாய், புல்லிலிருந்து பயிராய் - சமுதய வளர்ச்சிக்காக மாறியது,

சமுதய வளர்ச்சி - எண்ணிலிருந்து எழுத்தையும், எழுத்திலிருந்து கல்வியையும் - வாழ்க்கை வளமாக தோன்றியது
தோன்றிய வாழ்க்கை - கோட்டையிலிருந்து வானூர்தி தொடுத்து, பயிரிலிருந்து மருந்து எடுத்து - மேன்மையாய் மாறியது,

மேன்மையோ -
"மாறுமே இந்த பஞ்ச பூதமே, மாறாத நானே இங்கு வேதமே" - என்று
கொக்கரித்த மாற்றத்தையே,
காலமென்னும் கருவியால் மாற்றியது,

உயிர் தோன்றிய அன்றும் இருந்தது ஆகாயம் , "மாற்றமே" மாறிய -
"இன்றும் இருக்கிறது ஆகாயம்!!"
 
posted by Prasanna Parameswaran at 9:49 PM |


12 Comments:


At 4:13 AM, Blogger Syam

poverty, guys will always be guys அப்படின்னும் போஸ்ட் போடுறீங்க...இந்த மாதிரி சூப்பர் கவிதையும் போஸ்ட்ல போடுறீங்க..நீங்க தான் அந்த அன்னியனா...கலக்கல் கவிதைங்க :-)

 

At 6:14 AM, Blogger Bharani

excellent ones..esp the second kavidhai....kalakala ezhuthi irukeenga....keep going :)

 

At 7:38 AM, Blogger prithz

Hey, i cant read tamil so fast yaar... i will spend a whole day readin this post... really sorry that i cant comment anythin related to the post!!! but can see from the commments that u have written a beutiful post!! Keep it up!!!

 

At 8:33 AM, Blogger KK

hey super kavithai's Kalakureenga IA

 

At 12:10 PM, Blogger Balaji S Rajan

You have a great talent in writing kavithai. I respect anyone who could write well. Writing is not that easy. Some can talk well. To put all thoughts in writing is another art. Again put them in form of poem is a great art. Your thoughts are very good. 'Innum irukirathu Akayam' is super. Please keep writing and publish them. Keep all your collections and probably you can publish them as a book later. I will be reading all your posts leisurely. Keep up your good work.

 

At 3:49 PM, Blogger Jeevan

WOW!! both poems are wonderful.

I like the Mugam Thariyathu... para the 2nd one, How True!!

 

At 5:53 PM, Blogger Porkodi (பொற்கொடி)

me 8th !! :) aalakaala visham nu nalla yosichu ezhudi thalringa.. kadhai kavidhainu elatayum ningale ezhudina matavanga ellam enanga panuvom :(

 

At 6:49 PM, Blogger Prasanna Parameswaran

@ syam: nandri! anniyan sonnadhukum serthu! aana vikram maadhiri oru actoroda comeback ellam chance illanga! after 15-17 years(paartha 43 year guy maadhirya theiryaraaru hmmm?)avaroda paathirathukku kooda enna compare panna kudathu! he is an acting genius illa!

@bharani: welcome here! thanks and do visit again!

@ Prithz: so sweet of you! no fret! :) Frankly speaking, I write bcoz I wanted to pour my thots irrespective of what people might think, and lucky enuf I've been able to meet so many lovely people like you around the world!

@ KK,Usha: Thanks!

@ Bala: thank you sir! Looks like you are busy right now! Yes! I've been seriously thinking to get my own book published, and the day it happens I will be happiest man! :):)

@ Porkodi: Achacho! appadi ellam edhuvume kedayadhu! Im writing what I think Im good at! I'm not that good in writing jovial stuff! Besides If you just sit and think for a few minutes even you can write beautiful poems, idhukku onnu periya arivellam thevai illa. There are certain things in the world for which you need in born talent(like say singing, evalavudhaan saadhagam pannalum, kural erumai maadhiri irundha onniyum panna mudiyaadhu! :)), adhellam illana indha maadhiri edhavadhu panna vendiyadhudhaan!

 

At 1:08 AM, Blogger Priya

kalakkaringa ponga..kadhai, kavidhai..innum enna enna talents olichi vachirukkingalo..
romba nalla irukku 2 kavidhaigalum.

 

At 1:12 AM, Blogger Priya

//poverty, guys will always be guys அப்படின்னும் போஸ்ட் போடுறீங்க...இந்த மாதிரி சூப்பர் கவிதையும் போஸ்ட்ல போடுறீங்க..நீங்க தான் அந்த அன்னியனா...//

adhane..kadavul pathi, mirugam pathiya?

 

At 10:59 PM, Blogger KC!

hey, kalakareenga!! Super poem!!

 

At 2:19 AM, Blogger gils

wow...arumaiayna varigal...super kavidai..first time here..aarambamay amarkalama iruku