Wednesday, September 20, 2006
மீண்டும் மலரும் பூக்கள்! - பகுதி - IV

சனிக்கிழமை காலை 10.30 மணி! அவசர கதியில் வாரத்தின் ஐந்து நாட்களும் அலைந்த பின் ஒரு வார கடைசி வந்தால் சந்தோஷமா இருக்கு! வெகு நேரம் அழும் குழந்தையிடம் ஒரு மிட்டாய் கொடுத்தால், அந்த இனிப்பு அடங்கும் வரை மென்று பின் மீண்டும் அழத்தொடங்கும்! அது போல இந்த வார கடைசி இயந்திதிரமான ஓட்டத்திற்கு இனிப்பாய் விடுதலை அளிக்கிறது! பின் மீண்டும் அதே அசுரகதியில் வாரம் தொடங்கும்! ஏனோ ஒன்பதாவது படிக்கையில் நான் எழுதிய எழுதிய கவிதைதான் இப்ப ஞாபகத்துக்கு வருது!

கிராமமும் நகரமும்!
"கிராம மென்னும் வீட்டிலிருந்து வெளியேறி, காற்று என்னும் தோழனோடு இரவெல்லாம் துள்ளித்திரிந்த இயற்கையன்னை,
அதிகாலையின் உவகையில், பனியென்னும் செவ்விதழ்களால் என்னிமைகளில் முத்தமிட்டாள்! - ஆகா இதுவன்றோ கிராமியம்!
நகரமென்னும் நடைபாதையில், தொலைந்த தோழன் காற்றிற்காக, வாகன இரைச்சலாய் இயற்கையன்னை பெருங்குரலெடுத்து அலறியழ,
பிரபஞ்சத்தின் தந்தை கதிரவன், செங்கதிர் சாட்டையால் என் முகத்தில் அறைந்தார் - ஐயகோ இதுவன்றோ நரகம்!"

நகர வாழ்க்கைதான் எப்படி மாறி போச்சு, வாசுவின் வீடு நகரத்தின் மையப்பகுதில இருக்கு, அழைப்பு மணியை நான் அழுத்த, மாநிறமும் அல்லாது வெள்ளையும் அல்லாத ஒல்லியா ஓர் இளைஞன் கதவை திறந்து "இல்ல எங்களுக்கு எதுவும் வேண்டாங்க! இங்க எல்லாம் இருக்கு!" எனச் சொன்னார்
"இல்ல இங்க வாசுங்கிறது!..."
"நான்தான்! நீங்க.... ஓ மறந்தே போயிட்டேன் வானதிதானே அதுவும் ஒரு கூடையோட நின்னதும் யாரோ சேல்ஸ் லேடின்னு நினைச்சேன் மன்னிக்கனும் உள்ள வாங்க! ஒரு நிமிடம் இருங்க! ஏதாவது குடிக்கறீங்களா, சில்லுனு மோர் இல்ல ஏதாவது ஜூஸ்?"
"பரவாயில்லை வாசு! எனக்கு சில்லுனு தன்ணியிருந்தா போதும்!"
"என்னங்க இப்படி ஒரு பேரதிர்ச்சி குடுக்கறீங்க! சென்னைல அதுவும் தி.நகர்-ல வந்து, சில்லுனு தண்ணி கொடுன்னு கேக்கறீங்களே! இதுக்கு நான் என்னோட சொத்தையே எழுதி வெச்சுடுவேன்! ஒரு நிமிடம் உக்காருங்க! இதோ வந்துர்றேன்!" - என்று ஹாஸ்யமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.


அந்த நேரத்தில் வீட்டை நோட்டமிட்டேன்! நல்ல விசாலமான ஹால்,உள்ள நுழைந்ததும், 'எல்' வடிவத்துல இருக்கு, ஹாலின் மையத்தில் செங்கல் கட்டி ஹோமம் வளர்த்துக்காங்க, என்ன பூஜையா இருக்கும், ஹாலை ஒட்டினாற்போல சாமியறை, காஞ்சிபுரம் சங்கராச்சரியாரோட படம் மாட்டியிருந்தது! ம்ம்ம்! மோசைக் தரையா இருக்கறதுனால, நல்ல குளுமையா இருக்கு!
"இந்தாங்க சில்லுனு தன்ணி! ம்ம் சொல்லுங்களேன் உங்களைபத்தி! அப்பா, அம்மா இவங்க நான் குடுத்த விளம்பரத்தை பார்த்துட்டு வந்துருக்கங்க! பேரு வானதி"
"வனக்கம் பா, வணக்கம் மா!"
ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணை இவ்வளவு கூர்மையாக பார்க்க முடியுமா என்ன, அம்மாடி நல்ல அகலமான் விழிகள் இவரோட அம்மாக்கு! அவரது தாய் தொடர்ந்தாள்
"ரொம்ப சின்ன பொண்ணா தெரியரம்மா! வாசு அப்படியே நடேசன் பூங்காக்கு போயிட்டு வாடா, இங்க ஒரே உஷ்ணமா இருக்கு, காலாற குளிர்ச்சியா நடந்தா மாதிரியும் இருக்கும்"
பூங்காவை வந்தடைந்தோம்! சுளீரென்று அடிக்கும் வெயிலுக்கு இதமாய், மிக ரம்மியமாய் இருந்தது!
"வாசு! உங்க அம்மா ரொம்ப புத்திசாலி போல!"
"ஏன் சொல்றீங்க!"
"அவங்க முன்னாடி பேச கஷ்டபடபோகுதே இந்த பொண்ணுன்னு நாசூக்கா பூங்காக்கு அழைச்சுட்டு போக சொன்னாங்களே?"
"ம்ம்ம் எங்க அம்மாவைபத்தி நானே பெருமையா சொல்லிக்ககூடாது, இருந்தாலும் சொல்றேன் ரொம்ப நல்லுள்ளம் படைத்த உயர்ந்த சிந்தனையாளர் அவங்க"
"ம்ம்ம்! நான் பி.ஈ படிச்சுட்டு ஸ்டேட் பாங்கு ஆஃப் இந்தியா-ல வேலை பார்க்கிறேன்! 26 வயசு ஆகுது, அப்பா அம்ம ரெண்டு பேருக்குமே வயசாகுது, சரி எதுக்கு அவங்களை தொந்தரவு செய்யனும்னு நானே கிளம்பி வந்துட்டேன்! என்னோட கணவர் சுரெஷ் உங்களை மாதிரியே ஒரு கணிப்பொறியாளர், அமெரிக்காவுல ஒரு நதில குளிக்க போனபோது அவரை அடிச்சுகிட்டு போயிடுச்சு, உடம்பு கூட கிடைக்கலை! எனக்கு ஒரு வயசுல ஒரு பெண் குழந்தை, விலாசினின்னு பேரு! விளையாட்டுதனமா அவ வாழ்க்கைய அனுபவிக்கடுமேன்னு அப்படி ஒரு பேரை வெச்சாங்க!"
"ஆகா! நல்ல பேரு! ஒரு வேளை இப்பவே அவ கையும் கலையும் தையத்தக்கான்னு ஆட்டறத பார்த்துட்டு, நாளைக்கு இவ பெரிய டென்னிஸ் வீராங்கனையா வருவான்னு "சானியா மிர்சா"ன்னு பேர மாத்திடமாட்டீங்களே! மன்னிக்கனும், நான் கொஞ்சம் அப்பப்ப இப்படி கடிப்பேன், எல்லாம் நண்பர்களின் சேர்க்கை அப்படி" -ன்னு சொல்லிவிட்டு கலகலவென வாசு சிரித்தார்!எப்படி இவ்வளவு இயல்பாய் பேசுகிறார்!

"ஹா! பரவாயில்லை! என்னைப் பத்தி சொல்றதுக்கு வேறெதுவுமில்லை! நாங்க வடமா, பாரத்வாஜ கோத்திரம், நீங்க......"
"ஓ! நீங்களும் பிராமினா? பேசும்போதே நினைச்சேன் என்னடா பேச்சுல தெரியற்தேன்னு! நாங்க வாத்திமா! என்னை பத்தியும் ஒண்ணும் சொல்லிகற மாதிரி பெருசா இல்லை வானதி! சின்ன வயசுலேருந்தே நம்ம சமுதாயத்துக்காக ஏதாவது செய்யனும்னு ஆசை! ஸ்கூலுக்கு ஒருநாள் போகும்போது மனிதகுழி சாக்கடைல ஒருத்தர் இறங்கி சுத்தம் செய்யறத பார்த்து அதிர்ந்துபோனேன்! அவரு யாரை பத்தியும் கவலை படாம நட்டநடுவீதில தன்னோட ஆடைகளை களைந்து, சாக்கடைக்குள்ள தன்னோட கையை விட்டு சுத்தம் செய்தார், நான இருந்தா அப்படியே வாந்தி எடுத்துருப்பேன், கருப்பா புழுக்கள் நெளிய, அதை அவரு தோண்டி எடுத்தபோது உடம்பு பூரா பூரான் ஓடினா மாதிரி இருந்தது. எப்படி சார் இந்த வேலை செய்யறீங்கன்னு கேட்டேன்,
"தம்பி, முதல்ல எனக்கும் இந்த வேலை செய்ய கஷ்டமாதான் இருந்தது! தற்கொலை கூட பண்ணிக்கலாமான்னு நினைச்சேன்! என்ன நாரை பொழப்புடா இதுன்னு நிறைய பேரு சொல்வாங்க, ஆனா உண்மையிலே நாத்தம் புடிச்ச பொழப்பு இதுதான்! வேற வேலை எதுவும் கிடைக்கலை, அதனால இத செஞ்சேன்! இராத்திரி பக்கத்துல பொண்டாட்டி படுக்க மாட்டா, அதை விட கொடுமை மனுஷனுக்கு வேற எதுவும் கிடையாது! ஆனா போக போக பழகிடுச்சு, நமக்குதான் காலும் கையும் நல்லா இருக்கே, கூனோ குருடோ படற கஷ்டத்தை விட இது ரொம்ப மேல்! மத்த எல்லா வேலைகளுமே அடுத்தவனுக்கு பயந்தே செய்யனும், ஆனா சத்தியமா இன்னி வரைக்கும் என்னோட மனசாட்சிக்கு மட்டும் பயந்து இந்த வேலை செய்யறேன்! இங்க மேல் ஜாதி, கீழ் ஜாதி கிடையாது, மேலதிகாரி கிடையாது, லஞ்சம், ஊழல் கிடையாது. இந்த குப்பையும் நாத்ததையும் கூட அள்ளிடலாம், ஆனா சில பேரு மனசுக்குள்ள இருக்கற அழுக்கு இருக்கே அது என்ன பண்ணாலும் போகாது! " அவரை அப்படி சொன்னதை கேட்டதும் எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு, வாழ்க்கையை உண்மையா புரிஞ்சுகிட்ட மகானா எனக்கு அவரு தெரிஞ்சாரு! அன்னிக்கி முடிவு பண்ணேன், நம்மால் முடிந்தவரை அடுத்தவங்களுக்கு உதவி செய்யனும்னு!

"அதுக்காக ஒரு விதவையை கல்யாணம் பன்ணிகலாமுன்னு முடிவு செய்தீர்களா, என்ன ஏதாவது தியாகம் செய்யறேளோ?"
வாசு கல கலவென சிரிச்சார் " வானதி நீங்க இந்த ஒரு வருஷமா விதவை, அதாவது சமுதாயத்தின் பார்வையில இல்லியா! உங்க கேள்விக்கு நம்ம காப்டன் விஜயகாந்த் மாதிரி பதில் சொல்லட்டுமா? "இந்தியாவுல மொத்தம் 40 மில்லியன் விதவைகள் இருக்காங்க, அதுல 75% பேரு 50 வயசுக்கு மேலுள்ளவங்க, அதாவது 30 மில்லியன் பெண்கள், மீதி 25% 15-49 வயசுல இருக்கறவங்க. அதாவது 10 மில்லியன், அதுல 60% பெண்கள் கோவா, அஸ்ஸாம், கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்கள்ல இருக்காங்க! சரிவிகிதத்துல எல்லா மாநிங்களல இருக்காங்கன்னு வெச்சுகிட்டாலும் 1.5 மில்லியன் விதவைகள் தமிழ்நாட்டுல இருக்காங்க! ஏன் இவங்களுக்கெல்லாம் மருபடியும் வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்க கூடாதா? இவ்வளவு ஏன் அகில உலக விதவைகள் குழு இருக்கறது எத்தனை பேருக்கு தெரியும்! நான் தியாகமெல்லாம் பண்னலை. மனப்பூர்வமாதான் இதை முடிவு செஞ்சேன்! என்னை மாதிரியே சமுதாயத்துக்கு உதவி செய்யனும்னு நினைக்கிற ஒரு பெண் வாழ்க்கை துனையா அமைஞ்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்! நான் வேகமா ஒரு இலக்கை நோக்கி போகும்போது, என்னை தடுத்தி நிறுத்தி ஆசுவாசபடுத்த மென்மையான் ஒரு தோள் வேண்டும்னு நினைக்கிறேன்! என் குடும்பத்தையும் பார்த்துக்கறது ரொம்ப முக்கியமில்லையா. அதுக்கு நல்ல முதிர்ச்சியுடைய துணை வேணும்னு நினைக்கிறேன்!"
"இப்படி மென்மை, பூ, இலைன்னு சொல்லிதான் இத்தனை நாள்தான் பெண்களை வீட்டுக்குள்ளேயே வெச்சுட்டீங்க! எங்களுக்குன்னு எதுவும் தனி ரசனைகள் இருக்க கூடாதா?"
"தப்பு வானதி! மென்மைங்கிறதுதான் அருமையான இயல்பு! கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எறியும் தீயை, மென்மையான குளிர்ந்த நீர்தான் அணைக்கும்! இயல்பா மென்மையா இருக்கறதுன்கறது ஒரு தனி அழகு!
"ஆமா! ஆனா அந்த தீயை மென்மையான காற்றுதான் அலைகழிக்கும்! இன்னும் கொழுந்து விட்டு எறிய செய்யும்! "
மீண்டும் சிரித்தார் " அட்ராசக்கை! அழகா பேசறீங்க வானதி!, காற்று மென்மையா வீசினா, தீ கொழுந்து விட்டு எறியாது! அதுவும் வேகமா வீசினாதான் பிரச்சனையே ஆரம்பிக்குது! மென்மை கொடூரமா மாறினா அதனோட விளைவுகள் அதிபயங்கரமா இருக்கும்! அதனாலதான் கடுமையான பற்கள் விழுந்தாலும், மென்மையான நாக்கு கடைசிவரைக்கும் இருக்கும்! ஆனா அது தப்பா ஒரு வார்த்தை உதிர்த்தால், அவ்வளவுதான் "தீயினால் சுட்ட புண்தான்....."


"இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு! ஆனா நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வரணுமே! என்னோட குழந்தையை நாளைக்கு என்ன சொல்லபோறீங்க!"
"இதென்ன கேள்வி! நம்ம குழந்தைதான்!"
"அப்ப நாளைக்கு நமக்குன்னு ஒண்ணு பொறந்தா?"
"இலக்கணத்தை திருத்தி சொல்லனும்னா, நம்ம குழந்தைகள்! ஹா ஹா! ரொம்ப கடிக்கறேன் இல்ல!"
"இதெல்லாம் சரி ஊர் வாயும் உலைவாயும் மூட முடியாதே! என்ன செய்வீங்க!
" பெருச்சாளிக்கு பயந்துகிட்டு வீட்ட காலி பண்றது முட்டாள்தனம்! டென்னிஸ் ஜாம்பவான் ஆர்தர் ஆஷ் எய்ட்ஸ் நோயால பாதிக்கப்பட்டபோது, அவரிடம் நிருபர் ஒருத்தர் கேட்டாரு "உங்களுக்கு கடவுள் மேல கோபமாக இல்லியா! உங்களுக்கு இவ்வளவு பெரிய வியாதியை குடுத்துட்டாரேன்னு! அவரை கேள்வி கேக்கனும்னு தோணலியா" அதுக்கு அவரு சிரிச்சுகிட்டே
"உலகம் பூரா 40 லட்சம் குழந்தைகள், டென்னிஸ் விளையாடனும்னு கனவு காண்கிறார்கள்! அதுல 4 லட்சம் பேராலதான் கத்துக்கவே முடியுது! அந்த 4 லட்சத்துல, 4000 பேருதான் அகில உலக போட்டிகளான் விம்பிள்டன் முதலான போட்டிகள்-ல விளையாட தகுதி கிடைக்குது! அதுல 4 பேருதான் கடைசி போட்டில ஆடறாங்க, அதுல ஒருத்தர் தான் ஜெயிக்கிறார்! அந்த ஒருத்தனா நான் வந்த போது ஏன்னு கடவுளை கேக்கலை, அதுமாதிரி இப்ப மட்டும் ஏன் கேக்கனும், கோபம் கொள்ளவேண்டும்" வாழ்க்கைங்கிறதும் அதுமாதிரி ஒரு ஆடுகளம்தான்! துணிந்து போராட வேண்டியதுதான்! ஐயோ அடிபடுமேன்னு நினைச்சா விளையாட முடியாது!

ஒரு நிமிடம் அசந்து போனேன்! எப்படி இந்த மனுஷனால எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியுது! இவ்வளவு விஷயங்களை தெரிஞ்சு வெச்சுருக்காரே! பேசும் வார்த்தைகள் ஒரு தெளிவு இருந்தாலும் ஒரு ஆணவம் தெரியுதே! தான் மெத்த படித்த ஆண்கிற ஆணவமா! "Perfectionist breathes perfection and kills people"-ன்னு எப்பவோ படிச்சதுதான் ஞாபகத்துக்கு வருது! இவரோட என்னால வாழ முடியுமா! தொட்டதுக்கெல்லாம் குறை சொல்வாரொ! தான் சொல்றதுதான் சரின்னு அடுத்தவர் மேல் தன் எண்ணத்தை முரட்டுதனமாய் திணிக்கும் ஆண் வர்க்கமோ? ஆனாலும் இவரோட பேச்சு எனக்கு பிடிச்சுருந்ததே!
"வானதி! என்ன ரொம்ப யோசிக்கறேள்! -ன்னு என்னை கூர்ந்து பார்த்த வண்ணம் கேட்டார்! அப்பப்பா நல்ல மயக்கும் விழிகள்தான்! என்ன சொல்வதென்று தெரியாமல் நான் சிரிக்க, அவரே தொடர்ந்தார்
" என்னடா! இவன் எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரி பேசறானேன்னு யோசிக்கறீங்களா! நான் அப்படியெல்லாம் நினைக்கலைங்க! உங்களுக்கு என்ன பிடிக்குதோ நீங்க அத தாராளமா செய்யலாம் எங்க வீட்டுல! வாழ்க்கை எப்படி வாழ போறோம்னு பயப்படுவதை விட, வீரமா செத்து விடு-ன்னு நினைக்கறவன் நான்! அய்யோ! பார்த்துங்க?"
மரக்கிளையில் கால் தடுக்கி விழ இருந்த என்னை, பிடித்து தாங்கினார். மிதமான வெட்பம் உடம்பு முழுவதும் சரேலென பாய்ந்தது!
கையை விடுவித்தவாறே சொன்னார் "மன்னிக்கனும்! நான் பிடிக்கலேன்னா நீங்க கீழுந்துருப்பேள்! சரி ரொம்ப நேரம் பேசிட்டோம்னு நினைக்கிறேன்! வாங்கோளேன், சாப்பிட்டுட்டு போகலாம்!"
"இல்ல வாசு எனக்கு நேரமாச்சு! பேசினதுல நேரம் போனதே தெரியலை! அப்பா, அம்மா காத்துன்டுருப்பா அங்க! நான் சாவகசமா இன்னொரு நாள் வர்றேன்"
"அப்ப வர்றேன்கிறேளா!"-ன்னு நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே கேட்க
நான் ஒரு புதுமணப்பெண் மாதிரியான வெட்கத்துடன்(சே! நான் ஏன் இப்ப இப்படி வெட்கபடறேன்) " வரமுடியுமான்னு தெரியலை! உங்களோட இ-மெயில் என்கிட்ட இருக்கே! மெயில் அனுப்பறேன்! இ-கலப்பை இருக்கும்போது என்ன குறை, தமிழ்லேயே மடல் அனுப்பறேன்!"
வானம் லேசா இருட்டியவாறு தூறல் போட, என் தேகமும் குளிர, வேகமாய் வீடு போய் சேற துள்ளலாய் நடந்தேன்!................

தொடரும்!

பி.கு: ஸ்ஸ்ஸ்ஸபா! காதெல்லாம் அடைக்குதுடா சாமி! ஒரு கதை எழுத இவ்வளவு கஷ்டபடனுமா? இந்த கதைக்கான inspiration என்னோட cousin brother பார்த்துதான் வந்தது! அவர் ஒரு widow'aதான் கல்யாணம் பண்ணிண்டார்! கல்யாணம் பண்ணிக்கும்போது மன்னிக்கு ஏற்கனவே 7 வயசுல ஒரு பெண் குழந்தை! இன்னிக்கு சென்னைல அவரு ஒரு software company'la Vice President'a இருக்காரு! நான் இப்படி ஒரு கதை எழுதறேன்னு அவருக்கு தெரியாது! :) இந்த கதையை அடுத்து எப்படி எழுத போறேன்னு சொல்லமாட்டேன், ஏன்னா எப்படி எழுத போறேன்னு இது வரைக்கும் தெரியலை!:) Besides I'm moving to a new house this week, so I may be off blogging for a few days! Take care folks! :)

 
posted by Prasanna Parameswaran at 9:15 AM |


11 Comments:


At 9:57 AM, Blogger Porkodi (பொற்கொடி)

நல்லா இருக்கு :) இன்னும் ஒரு தரம் ஆழமா படிச்சுட்டு திரும்ப வரேன்..

 

At 5:43 PM, Blogger Prasanna Parameswaran

@ porkodi:நன்றி! சரி திரும்பி வாங்க!
@ உஷா!: நன்றி! நீங்களும் கலக்கறீங்க போங்க! உங்க கவிதைக்கு நல்ல விமர்சனம் குடுத்துற்காங்களே! வெற்றியடைய வாழ்த்துக்கள்! :-)

 

At 10:03 PM, Blogger Jeevan

Ennakum time ponathea thariyala, Romba nalla poguthu. Good Thinking:)

 

At 10:28 PM, Blogger Syam

எனக்கு ஒரே கேள்வி தான் முதல் அத்தியாயம் படிக்கும் போதிலிருந்து...எப்படி இப்படி எல்லாம் எழுத முடியுது...உக்காந்து யோசிப்பீங்களோ...எப்படி இருந்தாலும் உங்க எழுத்துக்கு ஒரு சலாம்..தொடருங்கள் யாகத்தை :-)

 

At 2:59 AM, Blogger Prasanna Parameswaran

@ jeevan: Good that you are enjoying it :)
@syam: neenga solradhu 100% correct, indha naalu post ezhudardhukaaga i've spent 12-15 hrs thinking over the weekend :( Actually its one of my dreams to have my own book published, aaana naan ezhudardha evan publish pannuvaannudhaan theriyala :)

 

At 3:36 AM, Blogger Priya

ஹ்ம்ம்ம்.. என்ன சொல்ல? பிரபிப்பா இருக்கு நீங்க எழுதறத பாத்து..வாழ்த்துக்கள்.

//...உக்காந்து யோசிப்பீங்களோ...//
என்ன நாட்டாமை, இந்த மாதிரிலாம் யோசிக்காம எழுத முடியுமா?

 

At 7:56 AM, Blogger KK

Chance'a illa supera kondu poreenga story'a...kalakals

 

At 10:07 AM, Blogger Preethe

Hi Prasanna
Romba nalla irukku ..
Village and City comparison kavitthai .. is too good

Romba differenta think pannareenga.
Waiting for the next part

 

At 10:30 AM, Blogger Syam

///என்ன நாட்டாமை, இந்த மாதிரிலாம் யோசிக்காம எழுத முடியுமா?//
@priya, உக்காந்து யோசிச்சாலும் எனக்கு எல்லாம் இதுல ஒரு .001% கூட தேற மாட்டேங்குதே :-)

 

At 2:34 PM, Blogger Porkodi (பொற்கொடி)

speechless!! enakum yosicha kuda idhellam ezhuda varadhu kalakunga.. na niraya sambadichu unga booka publish panren ;)

 

At 6:02 AM, Blogger Prasanna Parameswaran

@ priya: ippadiellam neenga soneenganaa appuram naan aluthruvaen! :)

@ Preethe: dhank you! differenalam illanga vera edhuvum vela vetti illa! Newyork nagarathula vara maadhiri, naanum laptopum naalu suvathukullae blogging bloggingoooo! kodumai kodumaiyoo! :)

@KK : dhanks!
@ Syam: namma ragasiyangala ambala padutha koodadhu! :)
@ Porkodi: ennala mudiyalaa avvvvvvv ammmmmmaa! irundhalum neenga sonnadhhe podhum thank you so much! :)