Friday, September 29, 2006
கணிப்பொறியாளனின் கண்கெட்ட நமஸ்காரம்!


அகங்காரமாய் இட்லியை மறுத்த உதடு,
இன்று அலங்கோலமாய் ப்ரெட்டை குதப்பியதேனோ,


சில நேரம் கடமைக்காக,
சில நேரம் கனவுகளுக்காக -
தொழில்நுட்பம் என்று பிதற்றி
உறவுகளின் நுட்பத்தை உதறி விட்டேனோ?

சூரிய வெளிச்சத்தை பார்த்துவிட்டு,
அறைக்குள் திரும்புகையில் - கண்கள் இருண்டதைப்போல,
கணிணித்திரையை பார்த்திவிட்டு,
வீடு திரும்புகையில் - நட்பும் உறவும் இருண்டதேனோ?

மனைவியின் தலையில் மல்லிகைச் சரத்தை ஸ்பரிசித்ததை விட,
மலர்மாலையை "போடோஷாப்"-பில் அலங்கரித்ததே அதிகம்!
பிள்ளையின் பிஞ்சு விரல்களை உச்சி முகர வேண்டிய என் உதடு,
முகம் தெரியாத client-இற்காக, போலியாய் நாள் முழுவதும் சிரிக்கிறதே,

"ஆரிராரோ என் கண்ணே நீ உறங்கு" என்று என் கழுத்தில் ஒற்றை டாலரைக் கட்டி மனமுழுவதும்
மகிழ்ச்சியுடன் என்னைத் தாலாட்டிய என் தந்தையின் முகம் எங்கே,
"abn-amro"-வில் ஆயிரமாயிரம் டாலரைக் குவித்தும்,
விட்டத்தை வெறித்து நோக்கும் என் முகம் எங்கே!

"கடா வயசார்து, இன்னும் அம்மா மடி வேணுமா, இரு உனக்கு ஒருத்தியை கட்டி வெக்கறேன்"
என்று செல்லமாய் கோபிக்க, அந்த சுகமான வருடலில் அன்று - உறங்கிய நான் எங்கே?
laptop-ப்பை கட்டிக் கொண்டு, பஞ்சு மெத்தையில்
புரண்டு புரண்டு தவிக்கும் இன்று - கிறங்கும் நான் எங்கே?

வயிற்றுக்காக உறவுகளை விட்டு வெகுதூரம் வந்தேன்,
வசதிக்காக குடும்பத்தை விட்டு வெகுதூரம் வந்தேன்,
வாழ்க்கைக்காக நட்பை விட்டு வெகுதூரம் வந்தேன்,
இத்தனை தூரம் வந்து களைத்த என்னிடம் - மனம் கொக்கரித்தது
"பைத்தியக்காரா! இதற்காக இவ்வளவு தூரம் வந்தாயே -
அன்பிற்காக இனி எங்கு செல்வாய், உலகம் உருண்டையடா,
கிளம்பிய இடத்திற்கே திரும்பிச் செல்!!!!"


 
posted by Prasanna Parameswaran at 8:11 PM |


18 Comments:


At 9:48 PM, Blogger Syam

கக்கக்கபோ....என்னமா எழுதி இருக்கீங்க...எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு ஓசிப்பீங்க இதெல்லாம்.... hats off to u :-)


நான் தான் பர்ஸ்டு... :-)

 

At 12:06 AM, Blogger Bharani

superb prasanna....really moved a lot...

//"பைத்தியக்காரா! இதற்காக இவ்வளவு தூரம் வந்தாயே -
அன்பிற்காக இனி எங்கு செல்வாய், உலகம் உருண்டையடா,
கிளம்பிய இடத்திற்கே திரும்பிச் செல்!!!!"//.....gr8 wordings....naan irukara nelamaki sema apt....

send this one to some tamil magazines....and keep going :)

 

At 12:35 AM, Blogger Priya

அய்யோ ப்ரசன்னா..திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க..
நான் ஏதோ US அ விட்டு போலாமானு யோசிச்சிட்டிருக்கேன். career ஐயே விட்டுடலாமானு யோசிக்க வைச்சிடுவிங்க போலருக்கே.

As Bharani said, don't confine ur creations to just the blog world. You deserve a much wider audience.

 

At 3:24 AM, Blogger starry nights

cannot leave a comment because I dont know how to read tamil.can you translate.

 

At 3:52 AM, Blogger Usha

adadada, enna kavidhai! sooper ponga!

btw, I takeyour comment, going to rewrite my post :) Enake kooda 3rd part sariya padala :)

 

At 3:54 AM, Blogger indianangel

@ syam: dhank you! enakku romba koochama irukku syam neenga ipapdi solradhu paarka! naan onnum appadi perusa ellam ezhudaliye

@ bharani!: thanks! sure I will try to do that!
@ Priya: :) naan appadi ellam edhuvume sollaliye, but a family has always bountiful happiness right?

 

At 4:23 AM, Blogger indianangel

@ lalitha: So sweet of you. Here goes the translation including the title

"A software engineer's prayer after sunset"

The pompous lips that hated to eat Idly,
Are pitifully eating Bread today,

Sometimes in the name of duty,
Sometimes in the name of Dreams,
By following science and technology,
did I miss the beautiful life-science of Kith and Kin around me?

The moment I walk corridors of my room,
Im blinded due to the long stare at the sun,
The moment I walk the corridors of my family and relationships,
Im blined due to the long stare at the monitor,

The hands that need to softly wreath flowers on my beloved's hair,
Are designing the flowers in "Photoshop" for a new project,
The lips that need to smell the aroma of my baby's hands,
Are nonchalantly showering words of praise for an unknown "Client"

When the benign hands of my father tied a dollar around my neck and sang lullabies for me - his face was all glory and bright,
And now when I have a thousand dollars in "ABN-AMRO", I still stare at the unknown horizon - all gloomy and tight,

When my mother, gently ruffled me and said
"You are as big as a goat, and you still want to sleep in my lap, wait I will get you a girl for that" - I had a happy slumber,
I have the laptop in my lap today, and a cozy bed - yet I rollover without sleep and I'm sombre,

For - livelihood I left my relatives and came this far,
For - comfort I left my family and came this far,
For - Life I left my friends and came this far,
And when I'm now exhausted having travelled this far - my antagonized heart whispered to me silently
" For all this gibberish, you came this far, For true love, where will you go? for the world is round, so go back my son to where you started - to find it at your home!"

Phew! Now hows that translation for you. It may not be that great, but I tried the best I can! :)

 

At 5:52 AM, Blogger Adaengappa !!

I feel you,buddy !!
Same pinch :-)

 

At 6:10 AM, Blogger prithz

OMG!!!! that was awesome!!! thnx a lot for the traslation... i think i felt the beauty of ur feelings in the english poem as much as it wud have been in the tamil version... kalakitinga!!!! Keep it up!!

 

At 8:48 AM, Blogger பொற்கொடி

hummmm.... romba beel agitinga polaruku.. adan usha veetlayum vandhu kuzhambitingala? illa she rewrote aftre that?? kavidhai super vazhakam pola :)) kanini thuraila irukum ellarume ore vidamana beelingsla than irupom polaruku..

 

At 9:25 AM, Blogger indianangel

@Prabhu, Prithz: Dhanks,
@ Porkodi: no feelings at all, aana idha padichuutu yaaravadhu romba feel panna adukku naan poruppu illa pa. Frankly, u know wat I never felt I've been missing home, got so many wonderful things to think and see - and besides u dont need to feel something to write about it! :) enzzoy ur weekend!

 

At 10:36 AM, Blogger starry nights

Prasanna..thank you so much for the translation, I have no words to say because it brought tears to my eyes. It is one of the most beautiful and thought provoking poems I have read.WOW! you write so well.thanks again.I enjoyed reading it.

 

At 11:03 AM, Blogger indianangel

@ Lalitha: Glad you enjoyed it. My intention is not to make anybody cry. sometimes you have a flurry of thoughts and you immediately scramble for pen and paer to put your thoughts down - thats what happened when I wrote this poem too :) Have a nice a weekend and come with great spirits after your surgery! Good luck! :)

 

At 3:10 PM, Blogger Jeevan

Wonderful friend!! the 1st 3rd and final was very nice. Some of my relatives who went to US feel hard for there food, some get tips form their Parents to cook.

 

At 7:31 PM, Blogger வேதா

ரொம்ப நல்லா இருக்கு ப்ரசன்னா:)

வெகு தூரம் கடந்து நீ வந்தாலும்
உன் எண்ணங்கள் காற்றாய் பறந்து நலம் விசாரிக்கும் உன் உறவுகளை:)

besides u dont need to feel something to write about it
சரியா சொன்னீங்க நான் கூட ஏதாவது எழுதினா உடனே அது என்னுடைய அனுபவம் என்றே பலர் நினைக்கின்றனர்:)

 

At 6:01 AM, Blogger மு.கார்த்திகேயன்

//மனைவியின் தலையில் மல்லிகைச் சரத்தை ஸ்பரிசித்ததை விட,
மலர்மாலையை "போடோஷாப்"-பில் அலங்கரித்ததே அதிகம்//

wonderful lines prasanna.. kalyaanam ayiduchchaa.

//எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு ஓசிப்பீங்க இதெல்லாம்//

@shyam, LOL :-))

 

At 6:07 AM, Blogger indianangel

@ karthi: he he! ippadi ezhudinaa seekaram aagumannu paarkalam :), oruthar erkanave asin'a book panni sadhi panittaar(nara nara!) adhanala naan bavanava book pannalannu nennakaren :)

 

At 12:31 AM, Blogger KK

IA Kalakal kavithai and poem... neenga yethu, yentha laguage'la yezhuthinaalum super'a irukku... Keep writing... and yeah try publishing your kavithai's in some book...