Friday, October 20, 2006
62. மீண்டும் மலரும் பூக்கள் - பாகம் V:
இதன் முதல் பகுதிகளை படிக்காதவங்க இங்க படிங்க:
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4

I suddenly got loads of work to do, so sorry friends, will be a little slow in reading all your posts. Have a safe and sweet Diwali and it will be a while before I write my next post, so those who have'nt read the previous parts of this story before, you can read it now :)

சென்ற இதழ் தொடர்ச்சி:
வானம் லேசா இருட்டியவாறு தூறல் போட, என் தேகமும் குளிர, வேகமாய் வீடு போய் சேற துள்ளலாய் நடந்தேன்!................

இனி:

5A தி.நகர் - பள்ளிக்கரனை வரை செல்லும் பேருந்து முன்னலாம் ஏறினா எப்படா எறங்குவோம்னு இருக்கும்! சும்மா புளிமூட்டையா போட்டு திணிக்கற மாதிரி எப்படிதான் இவ்வளவு ஜனங்களோ! வெளச்சேரி வந்து சேர்றதுக்குள்ள போதும் போதும்-னு ஆயிரும்! ஆனா இன்னிக்கி வாசுவோட பேசிட்டு வந்ததுக்கப்புறமா "வேளச்சேரி இறங்குங்க"-ன்கிற கண்டக்டரோட அறைகூவல கேட்டுதான் சுய உலகத்துக்கே வந்தேன்! வீட்டுக்குள்ள நுழையும்போது மணி மூனு!

"என்னடி இவ்வளவு லேட்டா வர்ற" -ன்கிற அம்மாவோட கேள்விக்கு " அவரோட பேசினதுல நேரம் போனதே தெரியலைம்மா! விலாசினி தூங்கிட்டாளா, இந்தா அவரோட ஜாதகம்" பதில் சொன்னவாறே உள்ளே நுழைந்தேன்!
"ம்ம்ம் தூங்கிட்டா! நீ சாப்பிட்டியா இல்லியா!"-ன்னு கேட்டவாறே ஜாதகத்தை வாங்கி உள்ளே வைத்தாள்
"இல்லமா! தட்டு எடுத்துவை சாப்பிடறேன்!"
"அசடு, அங்கே எதாவது ஹோட்டல்ல சாப்பிட வேண்டியதுதானே! சரி வா மோர்க்குழப்மும், பருப்பு உசிலியும் பன்ணியிருக்கேன், சாப்பிடு முதல்ல அப்புறமா பேசலாம்!" வழக்கமான அம்மாவின் அக்கறை! பொதுவாக எல்லா தாயும் இப்படிதான் போல, தன் குழந்தை எப்படி இருந்தாலும் எல்லையில்லா அன்பு காட்டத்தான் தெரியும். வழக்கமாக 10 நிமிடங்களில் சாப்பிட்டுவிடும் நான் இன்று, சாப்பிட்டு எழுவதற்குள் 25 நிமிடங்கள் ஆகிவிட்டது!
"ம்ம்ம் பையனை உனக்கு பிடிச்சுருக்கறா மாதிரி இருக்கே!"
ஒரு நிமிடம் ஆச்சர்யமாய் நான் அம்மாவை பார்த்து "அது எப்படி பிடிச்சுருக்குன்னு சொன்ன?"
"ஆமா இது பெரிய பிரம்மசூத்திரம்! புதுசா கல்யாணமாகிற பொண்ணா இருந்தா வெக்கத்தை வெச்சே கண்டு பிடிச்சுடலாம்! நீ அதைத்தாண்டி வந்தவ! சோத்துல கோலம் போட்டுன்டே அரை மணிநேரம் சாப்பிடும்போதே நினைச்சேன், அந்த பையனை பத்திதான் நினைச்சுன்றுக்கன்னு! பையனை பிடிச்சிருகா?"
"தெரியலைமா! நிறைய பேசினோம்! சும்மா எதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அவர் எடுத்த முடிவோன்னு நினைச்சேன், ஆனா அவரு எல்லா கேள்விக்கும் டாண் டாண்-னு பதில் சொல்றாரு! பேச்சுல ஒரு தெளிவு இருக்குமா! அவரோட அப்பா அம்மாவும் ரொம்ப நல்லவாளா தெரியறா! ஏம்மா, பெண்களால ஆண் துணை இல்லாம வாழவே முடியாதா?"

"ஏன் முடியாது, அன்னை தெரசாவும், சரோஜினி நாயுடுவும் எந்த ஆண் துணையோட வாழ்ந்தாங்க! ஆனா அவங்க அப்படி இருந்ததுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. சும்மா வீம்புக்கு எனக்கு யாரோட துணையும் தேவையில்லை, நான் தனியா இருந்து சாதிப்பேன்கிறது முட்டாள்த்தனம், துணைங்கிறது ஒரு பந்தம் கடைசி வரைக்கும் கஷ்டமோ நஷ்டமோ, எல்லா சுகதுக்கங்களிலையும் உன்னோடு நான் இருப்பேன்கிற நம்பிக்கைடி!"
"அப்படி நினைச்சுதானேமா என்ன சுரேஷுக்கு கட்டி வெச்சேள்! ஆனா அது நிலைக்கலியே! அவரோட நான் குடித்தனமே பண்ணலைம்மா. தான் நினைச்சதுதான் நடக்கனுன்கிற அகங்காரம். பக்கத்துல கல்லு மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் தெருவுல போற பொண்ணை பார்க்கிற கல்லுளித்தனம்! எல்லா ஆண்களும் அது மாதிரிதான் இருக்காங்க! எனக்கு சுரேஷோட வாழ்ந்த வாழ்க்கை ஒட்டவேயில்லைமா!"
"தப்பு வானதி! ஒரு ஆணை வெச்சு எல்லா ஆண்களும் இப்படிதான் இருப்பாங்கன்னு சொல்றது தப்புமா! அப்துல் கலாம் மாதிரி ஆண்கள் இருக்கற நாட்டுல நீ இப்படி பேசறத கேக்கறது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. பரிணாம படைப்பின் ரகசியம் என்னன்னு யாருக்கும் தெரியாது! ஆண்களிடம் டெஸ்டிரொடோனும் பெண்களிடம் ஈஸ்டிரோஜனும் ஏன் இருக்குன்னு யாருக்கும் தெரியாது! இந்த டெஸ்டிரோடொனினால்தான் ஆண்கள் முரட்டுதனமா இருக்காங்கன்னு தெரிஞ்சும் நீ இப்படி பேசறத பார்க்க எனக்கு அதிசயமாதான் இருக்கு!"
"முரட்டுத்தனம் இருந்தா கூட பொருத்துக்கலாம், ஆனா மூர்க்கத்தனம் இருந்தா ரொம்ப கஷ்டம்மா! உன்கிட்ட சொல்றதுக்கு என்ன அவருக்கு வேணும்கிறபோது படுக்க கூப்பிடுவார். ஒரு நாள் எதேச்சையா என் கை அவர் மேல பட்டதும் தள்ளி படு என்ன பொம்பளை நீ கொஞ்சம் கூட வெக்கமில்லாம, கச கசன்னு வந்து ஈஷிண்டு-ன்னு எரிஞ்சு விழுந்தார். சரி எதோ கோவத்துல இருக்காருன்னு விட்டுடேன். ஆனா எல்லா விஷயத்துலையும் இப்படித்தான். சாம்பாருல கருவேப்பிலை சரியா வேகலை, துவையல்ல காரம் ஜாஸ்தி, வீட்டை ஒழுங்கா பெருக்கலை, எதுக்கெடுத்தாலும் குத்தம். எல்லா வேலையும் அவர் செய்வார் நான் இல்லைன்னு சொல்லலை, ஆனா எல்லாமே 100% சரியா இருக்கனும்னு எதிர்பார்ப்பாரும்மா. நிறைய படிச்சதனால இப்படி எல்லாத்திலயும் ஒரு மூர்க்கத்தனமிருக்கோன்னு தோணும்! வாசு கூட நிறைய பேசினார், இவரை மாதிரியே இவரும் பெரிய அறிவாளியா இருப்பர் போல அதுதாம்மா பயம்மா இருக்கு!"

"அட பைத்தியக்காரி இதுக்கா இப்படி பயப்படுற. உங்கப்பாக்கு கூடத்தான் கோவம் வரும். கல்யாணமான புதுசுல அவருக்கு சுடசுட சாம்பாரும் பீர்கங்காய் கூட்டும், சாதமும் பண்ணிவெச்சுருந்தேன் எல்லாரும் சுடச்சுடத்தானே சாப்பிடுவா. உங்கப்பா அதுக்கு நேர்மாறு. "என்னது இவ்வளவு சூடா கொட்டற, எவன் சாப்பிடுவான் இதன்னு" கன்னம் சிவக்க ஜிவுஜிவுன்னு தட்டை வீசிட்டு எழுந்து போயிட்டார், கல்யாணமான முதல் வாரம்டி அது, அப்படியே எனக்கு குலை நடுங்கிடுத்து! அவர் அம்மா மொள்ள வந்து அவனுக்கு சூடா போட்டா பிடிக்காதும்மா அவனுக்கு கோவம் வர ஒரே விஷயம் இதுதான்னு சொன்னா! ஆனா இன்னிக்குப் பாரு எதை எப்படி போட்டாலும் அப்படியே மலை முழுங்கி மகாதேவன் மாதிரி லபக் லபக்குன்னு அமுக்கறார். இதை எதுக்கு சொல்றேனா சில ஆண்களுக்கு முரட்டுத்தனம ஜாஸ்தியா இருக்கும்டி, சுரேஷோட ஒண்ணரை வருஷம் வாழ்ந்துட்டு நீ இப்படி பேசற, உங்கப்பாக்கு இந்த ஒரு விஷயத்துல கோபம் போறதுக்கே 10 வருஷமாச்சுடி! இதுக்கு ஒரு விதத்துல காரணம் பெண்கள்தான்டி. பொண்ணா இருந்தா ஒருமாதிரியும், பையனா இருந்தா ஒரு மாதிரியும் அதே தாய்தானே வளர்க்கிறா, அது மாறனும் ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் ஒரே மாதிரி வளர்த்தாதான் இந்தா வேறுபாடுகள் மறையும்! உங்கப்பவோட அனுபவிச்சு வாழ்ந்த வாழ்க்கையிது நீ பொறந்தபோது "நம்ம குட்டிக்கு ஒரு தம்பி பாப்பாவோ இல்ல தங்கை பாப்பாவோ இருந்தா விளையாடறதுக்கு துணை இருக்கும்னு நினைக்கிறேன் நீ என்ன நினைக்கிறன்னு" கண்ணை சிமிட்டிண்டே கேட்டாரு. நான் "இல்லங்க வேண்டாம் இவளையே எப்படி வளர்க்க போறோம்னு பயம்மா இருக்குன்னு நான் சொன்னதும், "சரிம்மா நமக்கு ஒரு குழந்தையே போதும்-ன்னு சொல்லிட்டார். நான் உன்னை தூக்கி வைச்சு கொஞ்சினத விட, அவரோட மார்புலயும் தோள்லயும் தூக்கி உன்னை வளர்த்தாரு! முரட்டுத்தனம்கிறது இயல்புடி, இயல்பு மாறும் நாளடைவில், பண்புதான் மாறாது.
"அம்மா நீ இருந்த காலம் வெற. என்னுடைய காலம் இப்ப வேறமாதிரி. அவசரகதியில ஓடனும். 12 மனிநேரம் வேலை செஞ்சாலும் போதாது!"

"என்ன பெரிய காலம் ஜெனரேஷன் காப்-னு சொல்ற. எல்லா காலங்களிலேயும் கணவன் மனைவிங்கிற பந்தம் ஒண்ணுதாண்டி. காலத்துக்கு ஏற்ப நாமதான் மாறனும். எது வந்தாலும் வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கலாம்னு இரண்டு உள்ளங்கள் முடிவு பண்ணிவிட்டால் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அந்த காலத்தில எங்களுக்கு உங்களை மாதிரி அடுத்த தெருல ஆட்டோவும், பக்கத்து கடைல கீரையும் கிடைக்காது, ஊருக்கு தள்ளி ஒரு பெரிய ஆஸ்பத்திரி, ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை ஒரு பஸ், இவ்வளவு ஏன் 5 மைலுக்கு ஒரு பிரசவ வார்டுள்ள ஆஸ்பத்திரி. இதெல்லாம் நாங்கள் சமாளிச்சுட்டோம், இன்னிக்கு 20 மணி நேரத்துல கண்டம் விட்டு கண்டம் அமெரிக்கா போற உங்களுக்கு இதெல்லாம் கஷ்டமா! நம்பிக்கை இருந்தா எதுவும் முடியும்!

ஆல்ப்ஸ்(alps mountain) மலைத்தொடர்ச்சி தெரியுமில்லையா, france, italy, austria, bosnia, croatia, yugoslavia, albania முதலான நாடுகள்-ல 700 மைல் சுற்றளவும், 200,000 Square Km மைல்களுக்கு பரப்பரளவுடைய மலைதொடர்ச்சி. அதுவும் மெடிட்டரேனியன் மாகடலும் சங்கமமாகிற இடத்துல ஒரு குட்டி தீவு இருக்கு. அந்த குட்டி தீவுல கடலை ஒட்டியபடி, மலைப்பாறைகளில் இரண்டு ஆல்பட்ராஸ்(albatross) குடும்பம் பக்கத்துல இருந்துச்சு, முதல் குடும்பத்துல அம்மா பறவை தன்னோட குஞ்சுக்கு சாப்பாடு குடுக்கும்போதெல்லாம், அப்பா பறவை மூர்க்கத்தனமா குஞ்சை கொத்தி கொத்தி கீழ தள்ளிவிட்டுடும், ஆனா குஞ்சு கீழ விழுந்ததும் அதை மறுபடியும் தூக்கிட்டு வந்து கூட்டுல விட்டுட்டு இரைத்தேட பறக்க போயிடும்! இதனால அந்த குடும்பத்துல எப்பபாரு கணவன் மனைவி பறவைகளிக்கிடையே சண்டை வந்துட்டேஇருக்கும்!
இரண்டாவது குடும்பத்திலேயோ அப்பாவும் அம்மாவும் ஒத்துமையா அதோட குஞ்சுக்கு போஷாக்கா ஊட்டிவிடும். இதனால் இரண்டாவது குடும்பத்துல இருக்கற பெண் பறவைக்கு ரொம்ப சந்தோஷம் "எனக்கு எவ்வளவு அருமையான புருஷன், பக்கத்து கூட்டுல இருக்கற கணவன் மாதிரி மூர்க்கத்தனமா இல்லாம அன்பா இருக்காரு"-ன்னு

சிறிது நாட்களில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டது, உணவிற்காக வெகுதூரம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால இரண்டு குடும்பத்தையும் சேர்ந்த ஆண் பெண் இரண்டு பறவைகளும் இரைத்தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!. வேறு வழியில்லாமல் இரண்டு குடும்பத்து பறவைகளும் இரைத்தேட போக, இந்த கூட்டையே வெகுநாளாய் நோட்டமிட்டுகொண்டிருந்த மலைபாம்பு ஒன்று வேகமாய் இரு குஞ்சுகளையும் விழுங்க வந்தது! முதல் குடும்பத்தின் குஞ்சு அதோட அப்பா கொத்தி கொத்தி தள்ளிவிட்டதுனால ரொம்ப சின்ன வயசுலேயே பறக்க கற்றுக்கொண்டு விட்டது - வேகமாக சிறகை விரித்து பறந்து போச்சு, ஆனா இரண்டாவது குடும்பத்துல போஷாக்கா வளர்க்கப்பட்ட குஞ்சு எப்படி பறக்கறதுன்னு தெரியாமல் அந்த பாம்புக்கு இரையானது! மூர்க்கத்தனமான ஒரு ஆண் பறவைனாலதான் அந்த குஞ்சு பிழைத்துக்கொண்டது. தேடல்தான் வாழ்க்கையை வளமாக்கும், பறவைகளின் தேடல் இரை மட்டுமில்லை, பறந்து பறந்து இந்த உலகத்தை காணல்தான், அந்த குஞ்சு தன்னோட அப்பா மூர்க்கமா இருக்காறேன்னு நினைச்சுருந்தா, அதால் உயிர் தப்பியிருக்கவே முடியாது. ஆண்களின் இயல்பே மூர்க்கத்தனம்தான் அதுவும் ரொம்ப தேவைடி! அந்த குஞ்சு பறவை போல மூர்க்கத்த்னத்தால் கஷ்டமென்னும் பாறைகளில் முட்டி மோத வேண்டியிருக்கும், ஆனால் அதன் பலனாய், பக்குவப்பட்டு சிறகுவிரித்து எல்லையில்லா இன்பம் காணவேண்டியது நம்ம கைலதான் இருக்கு! புரியர்தா?"
"ரொம்ப நன்னா பேசறம்மா! அவரும் இப்படிதான் உன்னை மாதிரியே நல்லா பேசறாரு! சரி எனக்கு கொஞ்சம் சோர்வா இருக்கு நான் போய் மாடில படுத்துக்கறேன்"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து வந்த தினங்களில் ஜாதகபொருத்தம் சரியாகி போக( இந்த ஜாதகத்தை நினைச்சா எனக்கு சிரிப்பா வருது, எனக்கு இதில் நம்பிக்கை இல்லைன்னாலும் அப்பா அம்மாவோட விருப்பத்துக்கு இருந்து விட்டு போகட்டும்மென்னு விட்டுவிட்டேன்), வாசுவும் ஒரிருமுறை வந்துவிட்டு போனார். அவரை எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு(எனக்கும்தான்!) இந்த இரண்டு வார சந்திப்பில் நிறைய விஷயங்களை நானும் வாசுவும் பேச்ப்பேச அவர் மேல் எனக்கு தீராத அன்பும் மரியாதையும் வந்தது. அவருக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பலாம்னு இன்னிக்கு அவருக்கு ஒரு நீண்ட மடல் எழுதினேன்............

தொடரும்.........
 
posted by Prasanna Parameswaran at 8:49 AM |


22 Comments:


At 10:51 AM, Blogger Porkodi (பொற்கொடி)

ஹையா... நா தான் பர்ஸ்ட்டு

 

At 10:58 AM, Blogger Porkodi (பொற்கொடி)

ஆமாம், சில பெரிய அறிவாளிகள பாக்கும் போது எனக்கும் பயமா இருக்கும் :( & 100% பர்ஃபெக்ஷனிஸ்டா இருக்க கூடாது வாழ்க்கைலனு இப்போ தான் ஒரு கட்டுரை படிச்சேன்!!

 

At 2:33 PM, Blogger Jeevan

WISH YOU A HAPPY DIWALI Prasanna:)

Will come and read your post after diwali:)

 

At 8:30 PM, Blogger KK

Wish you a very Happy Diwali!!! Have a blast and nalla sweet saaptu enjoy pannunga... I will read and comment later :)

 

At 10:23 PM, Blogger Syam

technically naan thaan firstu...yenna ellorum post ku comment podala... :-)


//ஏன் முடியாது, அன்னை தெரசாவும், சரோஜினி நாயுடுவும் எந்த ஆண் துணையோட வாழ்ந்தாங்க! ஆனா அவங்க அப்படி இருந்ததுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. சும்மா வீம்புக்கு எனக்கு யாரோட துணையும் தேவையில்லை, நான் தனியா இருந்து சாதிப்பேன்கிறது முட்டாள்த்தனம்/


IA neenga kathai mattum sollala koodave philosophy,history & geography (alphs)...semaya eluthareenga...continue continue
:-)

 

At 10:23 PM, Blogger Syam

thanks for your wishes...WISH U TO A WONDERFUL DIWALI!!!

 

At 2:25 AM, Blogger Prasanna Parameswaran

@ porkodi! : pidiyungal murukkum, gulab jaamunum.
//ஆமாம், சில பெரிய அறிவாளிகள பாக்கும் போது எனக்கும் பயமா இருக்கும்

namma kitta illadhadha aduthavanga kitta paarkumbodhu konjam bayamadhaan irukkum! :) heh heh naanum appadidhanungo bayappaduvaen!
@ jeev,usha,kk: happy diwali toyou too!

@ syam:
IA neenga kathai mattum sollala koodave philosophy,history & geography (alphs)...semaya eluthareenga

// ha ha yaam petra inbam peruga ivvayagam, ellarum ella vishayum therinjukattumennu oru nalla ennathuldhaan ippadi boring padhiva ezhudaraen! :)

//technically naan thaan firstu...yenna ellorum post ku comment podala... :-)

naatamai, neenga rendavadhudhaan, dakalti raani araguraiya thookathula oru commenta pottutaangale! :) ungalukku kedayadhu murukkuum, gulab jaamunum! :)

 

At 2:41 AM, Blogger Priya

//அன்னை தெரசாவும், சரோஜினி நாயுடுவும் எந்த ஆண் துணையோட வாழ்ந்தாங்க! ஆனா அவங்க அப்படி இருந்ததுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. சும்மா வீம்புக்கு எனக்கு யாரோட துணையும் தேவையில்லை, நான் தனியா இருந்து சாதிப்பேன்கிறது முட்டாள்த்தனம், துணைங்கிறது ஒரு பந்தம் கடைசி வரைக்கும் கஷ்டமோ நஷ்டமோ, எல்லா சுகதுக்கங்களிலையும் உன்னோடு நான் இருப்பேன்கிற நம்பிக்கைடி//

வாழ்க்கையோட தத்துவத்தையே சொல்லிட்டீங்க.

//பொண்ணா இருந்தா ஒருமாதிரியும், பையனா இருந்தா ஒரு மாதிரியும் அதே தாய்தானே வளர்க்கிறா, அது மாறனும் ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் ஒரே மாதிரி வளர்த்தாதான் இந்தா வேறுபாடுகள் மறையும்! //

ரொம்ப சரி..

ஆனாலும் ஆண்களப் பத்தி கொஞ்சம் பயமுருத்தர மாதிரி சொல்லி இருக்கிங்க..

கதை எப்பவும் போல ரொம்ப இயல்பா விருவிருப்பா போகுது..

 

At 2:41 AM, Blogger Priya

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

At 2:55 AM, Blogger EarthlyTraveler

//ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் ஒரே மாதிரி வளர்த்தாதான் இந்தா வேறுபாடுகள் மறையும்! //
romba speeda padichen.dhudhan pattunnu manasukku pattadhu.nidhanama appuram vandhu padikiren.
Thanks for your wishes.wish you too a very happy diwali--SKM

 

At 3:18 AM, Blogger Keshi

Diwali Wishes to ya Angel!

Keshi.

 

At 8:15 PM, Blogger Prasanna Parameswaran

@ priya:
//ஆனாலும் ஆண்களப் பத்தி கொஞ்சம் பயமுருத்தர மாதிரி சொல்லி இருக்கிங்க..
அப்படியெல்லாம் கிடையாது! இப்பல்லாம் நிறைய சமத்து ஆண்களும் இருக்காங்க என்னை மாதிரி(என்னது????) :)

// கதை எப்பவும் போல ரொம்ப இயல்பா விருவிருப்பா போகுது..

நன்றி! இப்பதானே கதாநாயகனும், கதாநாயகியும் சந்திச்சுருக்காங்க - இனிமேல்தான் கதை சூடு பிடிக்கபோகுது பாருங்க. ஒருமாதிரி கோர்வையா கதையை யோசிச்சு வெச்சுருக்கேன் அநேகமா இந்த கதையை எழுதி முடிக்கும்போது 10-15 பகுதிகள் வந்துரும்னு நினைக்கிறேன்! ஆனா இங்க எழுதறதா வேண்டாமான்னு யோசிக்கிறேன்,கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதறியே, உன்னோட கதையை யாராவது சுருட்டிட்டா என்ன பண்ணுவன்னு என் friend வேற சொல்லி பயமுருத்திட்டான் - நம்ம blog உலக மேன்மக்கள் அப்படி பண்ணமாட்டாங்கன்னு சொல்லியிருக்கேன், anyway பார்க்கலாம் எப்படி இந்த கதை போகுதுன்னு! :)

@ Keshi: thank you! u too have a great diwali! :) I know you have trouble reading Tamil - sorry cant really help it!

 

At 8:17 PM, Blogger Prasanna Parameswaran

@ skm: பொறுமையா அப்புறமா படிங்க, ஒரு முழுமை கிடைக்கனும்னா எல்லா பகுதிகளையும் படிங்க! :)

 

At 10:29 AM, Anonymous Anonymous

Happy Deepawali Wishes to you too..Thanks a lot for visiting my site :)

 

At 11:10 AM, Blogger Porkodi (பொற்கொடி)

அதானே, நாட்டாம அழுகுணி ஆட்டம் எல்லாம் ஆடாதீங்க :)

குலாப் ஜாமூன் ஜோடர்! புத்தகம்னு முடிவே பண்ணிட்டீங்களா, கலக்குங்க :)

 

At 12:21 PM, Blogger ambi

nicely written. choice of words are excellant. let me wait for the next part. :)

 

At 11:28 PM, Blogger Dreamzz

mm..belated happy diwali..adutha partu eppo?

 

At 8:15 PM, Anonymous Anonymous

Hey Prasanna,

I just wanted to wish you a belated happy diwali and sal mubarak!

:)

 

At 7:26 AM, Blogger Prasanna Parameswaran

@ dhooya: Thanks for your wishes, hope you had a great time too!

@ usha: saringo! inimel nekshtu padhivu inga varadhu, booka vandadhukappurama padichukkunga! :)

@ ambi,dreamzz danku! nekshtu partu inimel inga varadhu! :)
@ amit: thank you! hope you had a great time too! :)

 

At 1:10 PM, Blogger Jeevan

Wonderful writing Prasanna! ungaludaiya albatross example super:) ovovutharukkum oru thunai thavaipaduthu, ennaku nanbargal theavai!!

 

At 6:00 AM, Blogger G3

Porumaiya ella episodum padichittu vara konjam late aayiduchu :)

Kadhaila kadhaiya mattum sollama neraya informationum kuduthirukkeenga.. Over budhisaaliya iruppeenga pola irukkae :)

Kadhai supera pogudhu.. Waiting eagerly for the next part. :)

 

At 6:24 AM, Blogger Prasanna Parameswaran

@ jeev, gayathri: nandringo, but aana romba theevirama yosichutrukaen inga kadhaiya continue panradha vendamannu!